Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th October 2022 12:22:22 Hours

பங்களாதேஸ் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் இளங்கலைப் பட்டதாரிகள் இராணுவ தலைமையகத்திற்கு விஜயம்

தற்போது இலங்கைக்கான ஆறு நாள் சுற்றுப்பயணத்தில் பங்களாதேஸ் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் இளங்கலைப் பட்டதாரிகளின் பிரதிநிதிகள் தமது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக திங்கட்கிழமை (3) இராணுவத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற் கொண்டனர்.

இங்கு வருகை தந்த குரூப் கெப்டன் எம்டிஏஐஏஎம்எம் கான் ஏஎப்டபிள்யுசி பிஎஸ்சி, ஏடிடபிள்யுசி தலைமையில் 43 பேர் கொண்ட தூதுக்குழுவினரை இராணுவத் தலைமையகத்தின் பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கபில தொலகே அவர்கள் வரவேற்று பதவி நிலை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.

இராணுவத் தளபதியின் சார்பாக, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்கள் குரூப் கெப்டன் எம்டி ஏஐ ஏஎம்எம் கான் மற்றும் வருகை தந்த பிரதிநிதிகள் குழுவை வரவேற்று, அவர்களுடன் சுமுகமான உரையாடலை மேற்கொண்டார்.இக் கருத்துப் பரிமாற்றத்தின் போது, மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு, பல ஆண்டுகளாக இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆயுதப்படைகளுக்கு இடையே நிலவும் ஒத்துழைப்பு தொர்பாக கூறியதோடு பணி உறவுகளின் பிணைப்பு, புரிந்துணர்வு மற்றும் பயிற்சித் பரிமாற்றம் தொடர்பாக அவர் மேலும் சுற்றிகாட்டினார்.

மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்கள் சிநேகபூர்வ உரையாடல்கள் சந்திப்பின் முடிவில் அவர்கள் இலங்கையில் மகிழ்ச்சியாக தங்கியிருக்க வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதுடன், இந்த சந்திப்பின் அடையாளமாக நினைவுச் சின்னங்களை வழங்கினார்.

அதன் பின்னர், இராணுவத் தலைமையகத்தில் உள்ள பயிற்சிப் பணிப்பாளர் பிரிகேடியர் கபில தொலகே அவர்கள் இலங்கை இராணுவத்தின் நிறுவன அமைப்பு மற்றும் அதன் தனியான செயற்பாட்டு அம்சங்கள் தொடர்பான விளக்கக்காட்சியை வழங்கினார். இந்த சுருக்கமான உரையாடலில் பொது பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானேகே, பிரதம சமிக்ஞை அதிகாரி மேஜர் ஜெனரல் லலித் ஹேரத், மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அவர்களின் இச் சந்திப்பின் அடையாளமாக அவர்கள் புறப்படுவதற்கு முன் அவர்கள் அனைவரும் பதவி நிலை பிரதானி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்படதக்கதாகும்.