Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th January 2024 19:55:21 Hours

பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் இராணுவத் தளபதியை சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகரான கொமடோர் எம் மோனிருஸ் அமான் டிஏஎஸ் என்ஜிபீ பீஎஸ்சீ பிஎன் அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்பீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை வெள்ளிக்கிழமை (ஜனவரி 05) இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

அவர்களது கலந்துரையாடல் இரு இராணுவத்திற்கு இடையில் நிலவும் இருதரப்பு உறவு மற்றும் இலங்கை இராணுவ படையினருக்கான பயிற்சியை மேலும் மேம்படுத்தவதை ஆராய்வதில் மையமாக கொண்டிருந்தது.

சிநேகபூர்வ சந்திப்பின் முடிவில், இலங்கை இராணுவத்தின் நல்லெண்ணத்தை அடையாளப்படுத்தி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் கொமடோர் எம் மோனிருஸ் அமான் டிஏஎஸ் என்ஜிபீ பீஎஸ்சீ பிஎன் அவர்களுக்கு நினைவுச் சின்னத்தை வழங்கினார்.