Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd May 2018 14:44:52 Hours

நைஜீரியா இராணுவ பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம்

நைஜீரிய இராணுவத்தின் திறமை வாய்ந்த இராணுவ பிரதிநிதிகள் ஜவர், நைஜீரியா இராணுவ மகளீர் படையணியின் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் இலங்கை இராணுவ பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இந்த நைஜீரிய இராணுவ பிரதிநிதிகள் இலங்கை இராணுவத்தின் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாண்டோ அவர்களை (21) ஆம் திகதி திங்கட் கிழமை இராணுவ தலைமையகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இச்சந்திப்பின் போது இராணுவ மகளீர் படையணியின் உள்கட்டமைப்பு முறைமைகள், வழக்கமான நடவடிக்கைகள், அமைப்பு முறைகளை உருவாக்குதல், கட்டமைப்பு அபிவிருத்திகள், நிர்வாக கட்டமைப்பு, வேடங்கள் மற்றும் பணிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.

நைஜீரியாவின் இராணுவ சிரேஷ்ட அதிகாரியான பிரிகேடியர் ஜெனரல் பி பீ பக்ரோஹா இலங்கைக்கான ஆறு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அநுர வன்னியாரச்சி மற்றும் 7 ஆவது இராணுவ மகளீர் படையணியின் இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நைஜீரியாவிலிருந்து வருகை தந்த இராணுவ பிரதிநிதிகளுக்கு 7 ஆவது இராணுவ மகளீர் படையணியைச் சேர்ந்த மேஜர் சதுரிகா பம்புவல , மகளீர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டட்லி வீரமன், இராணுவ பயிற்சி பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அநுர வன்னியாரச்சி மற்றும் இராணுவ தலைமையகத்தைச் சேர்ந்த இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.

Best Authentic Sneakers | Air Jordan 1 Retro High OG University Blue - Gov