Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd February 2023 18:20:14 Hours

நேபாளத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான நேபாளத் தூதரகத்தின் பாதுகாப்புத் இணைப்பாளர் கேணல் ராம் சந்திர காத்ரி அவர்கள் வெள்ளிக்கிழமை (02) இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களைச் சந்தித்தார்.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுடனான சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நல்லுரவுகளை நன்றியுடன் ஒப்புக்கொண்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான மில்லியன் வருட வரலாற்று உறவுகளையும் நினைவு கூர்ந்தார்.

சுருக்கமான உரையாடலின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, அவர்கள் நல்லெண்ணம் மற்றும் புரிந்துணர்வின் அடையாளமாக கேணல் ராம் சந்திர காத்ரி அவர்களுக்கு நினைவுச் சின்னத்தை வழங்கினார்.