Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th February 2024 19:15:10 Hours

நிலைஉயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் டீஏ பீரிஸ் அவர்களுக்கு இராணுவத் தளபதியிடமிருந்து அதிகாரச் சின்னம்

புதிதாக நிலை உயர்வு பெற்ற இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் டீஏ பீரிஸ் பீடீஎஸ்சீ அவர்கள் இராணுவ தளபதியின் அலுவலகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை 26 பெப்ரவரி 2024 அன்று சந்தித்து தனது அதிகார சின்னங்களைப் பெற்றுக்கொண்டு இராணுவத் தளபதியின் வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டார்.

சுமுகமான கலந்துரையாடல் மற்றும் வாழ்த்துக்களைத் தொடர்ந்து, இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் டீஏ பீரிஸ் பீடீஎஸ்சீ அவர்களுக்கு புதிய அதிகாரத்தின் சின்னமாக வாள் வழங்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் டீஏ பீரிஸ் பீடீஎஸ்சீ அவர்கள் இராணுவத் தளபதிக்கு தமது நன்றிகளைத் தெரிவித்ததுடன் நிகழ்வின் நினைவுகளைச் சேர்க்கும் வகையில் படங்கள் எடுத்துக் கொண்டதுடன் நிகழ்வு நிறைவுற்றது.