Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th January 2018 10:06:45 Hours

தைப்பொங்கள் தினத்தை முன்னிட்டு 700ற்கு மேற்பட்ட பக்தர்களுக்கு உணவளிக்கப்பட்டது

முல்லைதீவுப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 64ஆவது படைப் பிரிவினரின் தலைமையில் இந்து மதத்தினரின் தைப் பொங்கள் தின விழாவை முன்னிட்டு இலவச திண்பண்டங்கள் வழங்கள் மற்றும் ஒட்டுசுட்டான் சிவன் கோவிள் வளாகத்தில் சிரமதானப் பணிகளும் இப் படையினரால் கடந்த ஞாயிற்றுக் கிழமை (14) இடம் பெற்றது.

அந்த வகையில் பொது மக்களின் தைப்பொங்கள் தினத்தை முன்னிட்டு இவ் 64ஆவது படைப் பிரிவினரால் இச் சமூக சேவைப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் தமிழ் மற்றும் சிங்களவர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் வித விதமான கலாச்சாரபூர்வமான உணவு வகைகள் பகிரப்பட்டதோடு நல்லிணக்கத்தையும் ஒருங்கிணைப்பையும் மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறான திட்டங்களை 64ஆவது படைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

64ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்களின் தலைமையில் 100ற்கும் மேற்பட்ட அதிகாரிகள் , படையினர் மற்றும் 700ற்கும் மேற்பட்ட பக்தர்களின் பங்களிப்போடு ஞாயிற்றுக் கிழமை (14) அதிகாலை வேளை இடம் பெற்றது.

மேலும் ஒட்டுசுட்டான் சிவன் கோயிலில் இப் பிரதேசவாசிகள் உள்ளடங்களாக பாதுகாப்புப் படையினரின் பங்களிப்போடு இடம் பெற்றது.

அந்த வகையில் 64ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியவர்களின் அழைப்பை ஏற்று முல்லைதீவுப் பாதுகாப்புப் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்கள ஒட்டுசுட்டான் சிவன் கோயிலில் இடம் பெற்ற பொங்கள் பூஜை நிகழ்விலும் கலந்து கொண்டார்.

மேலும் இந் நிகழ்வில் முல்லைத்தீவுப் பாதுகாப்பு வலய அதிகாரி , கட்டளை அதிகாரிகள், அரச ஊழியர்கள் மற்றும் மத அதிகாரிகள் போன்றௌர் கலந்து கொண்டனர்.

bridge media | nike air max 95 obsidian university blue book list