Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd November 2023 23:02:27 Hours

தெற்கு அதிவேக பாதை கடமையில் இருந்த படையினரை தளபதி சந்திப்பு

புதன்கிழமை (22) பனாகொட மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் படையினருக்கு உரையாற்றி வரும் வழியில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இ/1 தெற்கு அதிவேக நெடுஞ்சாலை கொட்டாவ நுழைவாயிலில் சேவையில் இருந்த படையினரை நேரில் சென்று பார்வையிட்டார்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணியாளர்கள் புதன்கிழமை (நவம்பர் 22) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதையடுத்து அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த அதிவேக நெடுஞ்சாலையில் மேற்கு மற்றும் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் 31 அதிகாரிகள் மற்றும் 233 சிப்பாய்களை கொண்ட குழுவொன்று பணியமர்தப்பட்டது.

படையினர் பாதுகாப்பை வழங்கும் நோக்கிலும் கொட்டாவையிலிருந்து மாகம்புர வரையிலான இ-1 தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 22 அதிவேக நெடுஞ்சாலை நுழைவு/வெளியேறும் இடங்கள் வழியாக நுழையும் மற்றும் வெளியேறும் வாகன சாரதிகளுக்கான டிக்கெட்டுகளை வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் மாகம்புர சந்திப்பில் படையினருடன் உரையாடியதுடன் அவர்களின் புதிய அவசர சேவைகள் தொடர்பில் அவர்களுடன் கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்.

இராணுவத் தளபதியுடன் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ மற்றும் பல சில சிரேஷ்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.