Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th April 2023 20:09:05 Hours

துன்னாலையில் இராணுவத்தினரின் உதவியுடன் வீடு பெற்ற பயனாளி தனது துயரத்தினை விவரிப்பதுடன் இராணுவத்தினருக்கு நன்றி தொரிவிப்பு

யாழ்ப்பாணம் துன்னாலையில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட 767 வது புதிய வீட்டின் திறப்பு நிகழ்வின் போது பயனாளி நான்கு பிள்ளைகளின் தாயுமான திருமதி சண்முகம் சந்திரகலா மற்றும் அவரது உடல் ஊனமுற்ற கணவர் சார்பாக கிராமத்தில் வசிக்கும் திருமதி ரதீஸ்வரன் ராஜேஸ்வரி இராணுவ திட்டத்திற்கு பாராட்டுகளையும் தமது கருத்துக்களையும் தெரிவித்தார். அவரது முழு உரை பின்வருமாறு:

“யுத்தம் நிறைவடைந்து நாட்டில் அமைதி நிலைநாட்டப்பட்ட பின்னர் இலங்கை இராணுவம் தான் வடக்கில் உள்ள தமிழ் மக்களின் இதயங்களிலும் மனங்களிலும் நெருங்கிய உறவினர்களாக சென்றடைந்துள்ளது. துன்னாலை ஒரு ஏழைக் குக்கிராமமாகும், அங்கு குறைந்த வருமானம் பெறும் பிரிவினரின் துன்பகரமான குடும்பங்கள் வசிக்கின்றன. இராணுவம் அவர்களுக்கு உதவி செய்யும் வரை இந்தப் பகுதியில் உள்ள இந்த ஏழை மக்களின் குறைகளைக் கவனிப்பதில் எவரும் அக்கறை காட்டவில்லை. எனவே இந்த வறுமையில் வாடும் துன்னாலை பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட இந்த வறிய மக்களுக்கு இராணுவத்தினரால் வழங்கப்பட்டு வரும் ஆதரவும் தொடர்ச்சியான சேவையும் பாராட்டுக்குரியது.

எமது சமூகத்தில் மிகவும் வறிய மற்றும் மோசமாக பாதிக்கப்பட்ட பிரிவினரை கண்காணித்து இலங்கை இராணுவம் வீடற்றவர்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணித்து வடக்கில் உள்ள தேவையுள்ள மக்களுக்கு பலத்தை வழங்குகிறது. தற்போது வடக்கில் மிகவும் தகுதியான பிரிவினருக்கு இராணுவம் பெருமளவிலான வீடுகளை நிர்மாணித்துள்ளது உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டைப் பெற்றவர், தனது உடல் ஊனமுற்ற கணவர் மற்றும் தமக்கென சரியான நிரந்தர வீடு இல்லாமல் இருந்த குடும்பத்தின் ஆதரவற்ற பிள்ளைகளுடன் இன்று முழு வசதிகளுடன் கூடிய வீட்டிற்கு குடிபெயர்ந்தார். இராணுவ அதிகாரிகள், அவர்களின் முந்தைய தங்குமிடத்தை பார்த்து, குடும்பத்திற்காக இன்று இந்த புதிய வீட்டை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்தனர், அதற்காக இராணுவத்திற்கு எனது மனமார்ந்த மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோன்று, இந்தப் பகுதியில் உள்ள இராணுவம் எங்களுக்குப் பாதுகாப்பை வழங்குவதோடு, தேவையான உலர் உணவுகள், பாடசாலை உபகரணங்கள், சைக்கிள்கள் போன்றவற்றை வழங்குகிறது அதற்காக நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து எனது உரையை முடிக்கிறேன்," என்று முடித்தார்.

(குறிப்பு: செய்தி சிறப்பம்சங்களில் இவ் வீட்டின் வழங்கல் நிகழ்வு பற்றிய கதையைப் பார்க்கவும்!)