Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th December 2017 08:07:35 Hours

ஜனாதிபதியவர்கள் காலாட் படை பயிற்றுவிப்பு மையத்தில் இடம் பெற்ற சமூர்த்தி அதிகாரிகளுக்கான பயிற்ச்சிப் பட்டறையில் உரையாற்றினார்

முப்படைகளின் தளபதியான கௌரவமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மின்னேரியாவிலுள்ள காலாட் படை பயிற்றுவிப்பு மையத்தினால் (ITC) நாடெங்கிலும் புதிதாக நியமிக்கப்பட்ட 1904 சமூர்த்தி அதிகாரிகளுக்கான “ தலைமைப் பயிற்ச்சி ”நிகழ்வின் போது கடந்த செவ்வாயக் கிழமை (5) கலந்து கொண்டு உரையாற்றினார்.

இவ்வாறு வருகை தந்த ஜனாதிபதியவர்களை கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதியான மெஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வெல மற்றும் மின்னேரியாவின் காலாட் படை பயிற்றுவிப்பு மையத்தினால் (ITC) பிரிகேடியர் சுராஜ் பன்சஜாவா போன்ற இராணுவ உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

இதன் போது உரையாற்றிய ஜனாதிபதியவர்கள் இப் பயிற்ச்சிப் பட்டறையின் மூலம் சமூர்த்தி அதிகாரிகளுக்கான முக்கியத்துவம் மற்றும் செயல்திறன் பற்றி எடுத்துரைத்தார்.

இவ்வாறான தலைமைப் பயிற்சிப் பட்டறையானது இராணுவத்தினரால் நாடெங்கிலும் உள்ள 17 இராணுவ பயிற்ச்சி மையங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் சமூக நலன்புரி , கண்டி உடரட்ட அமைப்பினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை இராணுவம் இணைந்து இவ்வாறான தலைமைப் பயிற்சிப் பட்டறையை ஒழுங்கு செய்துள்ளது.

அந்த வகையில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் இராணுவ தலைமையகம் ,பாதுகாப்பு அமைச்சு மற்றும் சமூக நலன்புரி, கண்டி உடரட்ட அமைப்பு போன்றவற்றின் ஒருங்கிணைப்போடு இடம் பெற்ற “தலைமைத்துவ நேர்மறை அனுகுமுறை மற்றும் ஒழுக்கப் பயிற்ச்சி”எனும் கருப்பொருளில் நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் ஆரம்பமான இப் பயிற்சிப் பட்டறையில் புதிதாக நியமிக்கப்பட்ட 1904 சமூர்த்தி அதிகாரிகள் உள்ளடங்களாக 1521 பெண் அதிகாரிகள் காணப்படுகின்றனர்.

அந்த வகையில் கண்டி உடரட்ட அமைப்பினால் பாதுகாப்பு அமைச்சிற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க இலங்கை இராணுவமானது 1/3 பங்கை நாட்டின் அபிவிருத்திக் கடமைகளுக்காக செயல்படல் வேண்டும் என்ற இராணுவத் தளபதியவர்களின் கருத்திற்கமைய இராணுவ பயிற்ச்சிகள் பணிப்பகத்தின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் விஜித்த ரவிப்பிரிய அவர்களினால் இப் பயிற்ச்சிப் பட்டறை ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்றது.

அந்த வகையில் இச் சமூர்த்தி அதிகாரிகளுக்கான தலைமைத்துவப் பயிற்ச்சிப் பட்டறைகள் தற்போது தியத்தலாவை தொண்டர்ப் படைப் பயிற்றுவிப்பு மையம் (VFTS), மின்னேரிய காலாட் படையணிப் பயிற்றுவிப்பு மையம் (CTS), அம்பாரை போர்ப் பயிற்சிப் பயிற்றுவிப்பு மையம் (MSTS), தியத்தலாவை மார்க்ஸ்மென்சிப் பயிற்றுவிப்பு மையம் (CAVT), கலாத்தீவூ இராணுவ தொழிற் பயிற்ச்சி மையம் (ACTC), பனாகொடை 6ஆவது இலங்கை பீரங்கிப் படை மையம் (SLA) மின்னேரிய பீரங்கிப் படை மையம் , எம்பிலிப்பிட்டிய பொறியியலாளர்ப் படை மையம் , பூவெலிக்கட சமிக்ஞைப் படை மையம் , அம்பேபுஸ்ஸ இலங்கை இராணுவ சிங்கப் படையணித் தலைமையகம் , தம்பாகொடை இலங்கை இராணுவ போர்க் கருவிப் படை பயிற்றுவிப்பு மையம் , குட்டிகலஇலங்கை இராணுவ சேவைப் படை பயிற்றுவிப்பு மையம், புத்தளம் விஜயபாகு காலாட் படைத் தலைமையக பயிற்றுவிப்பு மையம்,மெதவாச்சி 4ஆவது (தொண்டர்) இலங்கை இராணுவ பெண்கள் படையணி பயிற்றுவிப்பு மையம் , தெஹிஅத்தகண்டிய 3ஆவது (தொண்டர்) இலங்கை இராணுவ பெண்கள் படையணி பயிற்றுவிப்பு மையம்,மற்றும் ரண்தம்பை தேசிய கெடெட் படையணி பயிற்றுவிப்பு மையம் (NCC) போன்ற பயிற்றுவிப்பு மையங்களில் இராணுவ பயிற்ச்சிகள் பணிப்பகத்தின் பணிப்பாளரவர்களின் கண்காணிப்பின் கீழ் இடம் பெறுகின்றது.

இவ்வாறான தலைமைத்துவப் பயிற்சிப் பட்டறையானது டிசெம்பர் மாதம் 9ஆம் திகதி 2017ஆம் ஆண்டு நிறைவு பெறவுள்ளது.

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதியான மெஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வெல, மின்னேரியாவின் காலாட் படை பயிற்றுவிப்பு மையத்தினால் (ITC) பிரிகேடியர் சுராஜ் பன்சஜாவா, உயர் அதிகாரிகள் மற்றும் பல சமூர்த்தி அதிகாரிகள் போன்றௌர் கலந்து கொண்டனர்.

best Running shoes brand | New Jordans – Air Jordan 2021 Release Dates , Gov