Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th January 2024 20:32:35 Hours

சுகாதாரத் துறை வேலைநிறுத்தம் காரணமாக நாடளாவிய ரீதியில் அத்தியாவசிய சுகாதார சேவைகளில் இராணுவத்தினர்

பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சுகாதாரத் துறையில் உள்ள சிறு ஊழியர்களின் தொழிற்சங்கங்களின் நாடளாவிய வேலைநிறுத்தத்தால் ஏற்பட்ட சவால்களுக்கு தீர்வு காண இலங்கை இராணுவம் தீர்க்கமான நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய பாதிக்கப்பட்ட அரசாங்க வைத்தியசாலைகளில் இன்று (ஜனவரி 16) அத்தியாவசிய சுகாதார சேவைகள் சுமூகமாக இயங்குவதற்கு தமது படையினரை நிலைநிறுத்தியுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி பொது வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை, பேராதனை போதனா வைத்தியசாலை, மாத்தளை மாவட்ட வைத்தியசாலை, குருநாகல் போதனா வைத்தியசாலை மற்றும் அரச வைத்தியசாலைகளான மொனராகலை, நுவரெலியா, பதுளை, ஹம்பாந்தோட்டை, பலாங்கொடை, திஸ்ஸமஹாராமய, தெபரவெவ, பலாங்கொடை, எஹலியகொட, தியத்தலாவ, மாத்தறை, அவிசாவளை மற்றும் அனுராதபுரம், மதவாச்சி, கஹடகஸ்திகிலிய மற்றும் பல வைத்தியசாலைகளில் சுகாதார வசதிகளின் சீரான செயல்பாட்டைப் பராமரிப்பதை நோக்கமாகக் கொண்டு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அந்தந்தப் பாதுகாப்புப் படைத் தளபதிகளின் மேற்பார்வையின் கீழ், இராணுவத்தினர் வைத்தியசாலைகளில் உதவி வழங்குவதற்கும், சுகாதாரச் சேவைகள் இடையூறுகள் இல்லாமல் தொடர்வதை உறுதி செய்வதற்கும்நிறுத்தப்பட்டுள்ளனர். அவசர கால நடவடிக்கைகளில் மேலதிக படையினரை அனுப்புவதற்கு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.