Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th June 2023 19:13:43 Hours

சீன தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கை சீன மக்கள் குடியரசின் தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேணல் சோவ் போ இன்று (ஜூன் 19) காலை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.

சுமுகமான சந்திப்பில் மரியாதைகளை பரிமாறிக்கொண்டதுடன் மற்றும் இரு இராணுவ அதிகாரிகளின் அக்கறை மற்றும் ஆர்வமுள்ள பொதுவான விடயங்களில் கவனம் செலுத்தினர். லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் சிரேஷ்ட கேணல் சோவ் போ ஆகியோர், இரு நாட்டு ஆயுதப் படைகளுக்கும் இடையே நீடித்து வரும் நல்லெண்ணம், ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றின் நீண்ட கால பிணைப்புகளை நினைவு கூர்ந்தனர்.

இலங்கை இராணுவத்திற்கான விசேட பயிற்சித் திட்டங்களை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இரு நாடுகளின் ஆயுதப் படைகளும் வெவ்வேறு பரிமாற்றத் திட்டங்கள் மற்றும் பயிற்சித் தொகுதிகளில் பங்கேற்பது குறித்தும் கலந்துரையாடினர். தற்போது, 42 இலங்கை இராணுவ அதிகாரிகள் சீனாவில் பயிற்சியில் உள்ளனர். இராணுவத் தளபதி சீன இராணுவ வீரர்களை இலங்கை இராணுவத்தின் வழங்கல் பணிநிலைப் பாடநெறியில் பங்கேற்க அழைத்தார். இந்த ஆண்டில் களப் பயிற்சிகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் சீனத் தூதரிடம் தெரிவித்தார்.

இதேபோல், பிராந்தியத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள போதைப்பொருள்களைக் கண்டறிவதற்கான உளவுத்துறையைப் பகிர்ந்துகொள்வது மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற மனோவியல் பொருட்களைத் தடுப்பது குறித்தும் அவர்கள் விவாதித்தனர். சுமூகமான சந்திப்பின் முடிவில் லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் வருகை தந்த பாதுகாப்பு ஆலோசகருக்கு நினைவுச் சின்னத்தை வழங்கி இலங்கை இராணுவத்தின் நல்லெண்ணத்தை அடையாளப்படுத்தினார்.

சீன தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் கேணல் காவ் பின் அவர்களும் அன்றைய சந்திப்பில் கலந்துக்கொண்டார்.