Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th May 2018 13:47:37 Hours

சிங்கப் படையணியின் விளையாட்டு போட்டிகள்

இலங்கை சிங்கப் படையணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2018 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு போட்டிகள் கொழும்பில் அமைந்துள்ள சுகததாஸ சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்தார். இந்த விளையாட்டு போட்டிகளில் 900 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் சிங்கப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பியல் விக்ரமரத்ன அவர்கள் வாழ்த்துரையை நிகழ்த்தினார்.

இறுதிச் சுற்றுப் போட்டியில் 400 மீற்றர், 800 மீற்றர், 100 மீற்றர், 4 x 100 மீற்றர் ரிலே, 4 x 100 பாடசாலைகளுக்கான ரிலே, இடம்பெற்றன.

இந்தப் போட்டிகளில் 5 ஆவது (தொண்டர்) சிங்கப் படையணியின் லான்ஸ் கோப்ரல் ஏ.எம்.எல்.பி குணரத்ன அவர்கள் சிறந்த விளையாட்டு வீரராக தெரிவு செய்துள்ளனர்.

இவரிற்கு இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் பரிசினை வழங்கி வைத்தார்.

இராணுவ படையணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 4 x 200 ஓட்டப் போட்டிகளில் இலங்கை இராணுவ சேவைப் படையணி வெற்றியை சுவீகரித்துக் கொண்டன.

பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற இந்தப் போட்டிகளில் புனித பெனடிக் கல்லூரி வெற்றியை சுவீகரித்துக் கொண்டன.

இந்த நிகழ்வில் நன்றியுரை பிரிகேடியர் ரஜீவ் விக்ரமசிங்க அவர்களினால் ஆற்றப்பட்டன.

இறுதி பரிசளிப்பு விழாவிற்கு இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திரிகா சேனாநாயக அவர்கள் வருகை தந்தார்.

Sports News | Nike Releases, Launch Links & Raffles