Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th December 2023 21:12:37 Hours

சர்வதேச புகழ் 71 வயது முள்ளியவளை தடகள வீராங்கனைக்கு முல்லைத்தீவு தலைமையகத்தில் கௌரவிப்பு

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமைகத் தளபதி முல்லைத்தீவு பிரதேச சிவில் சமூகங்களுக்கிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் முள்ளியவளை பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதான திருமதி அகிலா திருநாயகி அவர்களின் சர்வதேச சாதனைகளை நத்தார் தினத்தன்று (டிசம்பர் 25) அவரது வீட்டிற்குச் சென்று பரிசளித்து கௌரவித்தார்.

எம்.எஸ்.அகிலா திருநாயகி அவர்கள் அனமையில் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற தடகளப் போட்டியில் பங்கேற்று முறையே 1500 மீ, 5000 மீ மற்றும் 800 மீ போட்டிகளில் 2 தங்கப் பதக்கங்களையும் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

ஓய்வு பெற்ற சிறை அதிகாரியான அவர், விளையாட்டு காலணிகள் இல்லாமல் போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு தைரியமானவர். அவர் நான்கு சகோதரர்கள் மற்றும் ஒன்பது சகோதரிகளைக் கொண்ட குடும்பத்தில் ஆறாவது நபர். அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு சிறை அதிகாரியாக தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், பிலிப்பைன்ஸில் பதக்கங்களை வெல்வதற்கு முன்பு தாய்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் பல போட்டிகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.

அவரது சமீபத்திய சர்வதேச சாதனைகளைக் கேள்வியுற்ற முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் அவரது வீட்டிற்குச் சென்று அவரைப் பாராட்டி ரூபா 50,000/= ஊக்கத்தொகையை வழங்கினார். தளபதியின் வேண்டுகோளின் பேரில் 15 உலர் உணவுப் பொதிகள் அதே சந்தர்ப்பத்தில் பிரதேசத்தின் ஆதரவற்ற குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்வை 59 வது காலாட் படைப்பிரிவு மற்றும் 591 வது காலாட் பிரிகேடின் படையினர் மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.