Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th August 2018 10:33:07 Hours

கெடெற் அதிகாரிகள் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா பயணம்

தியதலாவையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ எகடமியில் பயிற்சியை மேற்கொள்ளும் 58 கெடெற் அதிகாரிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு சுற்றுலா பயணத்தை ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை மேற்கொண்டனர்.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த இந்த கெடெற் அதிகாரிகளை கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்கள் சார்பாக கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளான கேர்ணல் நிஷாந்த திசாநாயக மற்றும் கேர்ணல் ரவி பதிரனவிதான அவர்கள் வரவேற்றனர்.

பின்னர் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவி நிலை பிரதானி பிரிகேடியர் சன்ன வீரசூரிய அவர்களினால் இந்த கெடெற் அதிகாரிகளுக்கு 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கை மற்றும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் காரிய பொறுப்புகள் தொடர்பான அறிவுறுத்தல்களை தெளிவூட்டி விரிவுரைத்தார். பின்னர் இந்த கெடெற் அதிகாரிகள் ஆனையிறவில் உள்ள ஹசலக காமினியின் நினைவு தூபியையும் சென்று பார்வையிட்டனர்.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த கெடெற் அதிகாரிகளை யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது சார்பாக யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேர்ணல் பதவி நிலை பிரதானி அவர்கள் வரவேற்றார்.

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படையினரின் பங்களிப்பு மற்றும் பொறுப்பையும், மக்களுக்கு வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காகவும் இராணுவம் மேற்கொண்ட முயற்சிகளையும் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் சமரசப் பொறிமுறையையும் யாழ்ப்பாண குடாநாட்டில் பின்தொடர்ச்சியற்ற சூழலில் முன்னெடுத்துச் செல்லுதல், தொடர்பான விளக்கங்களை வழங்கினார்.

பின்னர் இந்த கெடெற் அதிகாரிகள் யாழ்ப்பாணத்திலுள்ள நல்லிணக்கபுரம் வீடமைப்பு திட்ட கட்டிடங்கள், யாழ் கோட்டை, அராலி நிலையம், பொன்னாலை கேணி, நகுலேஸ்வரம் கோயிலை சென்று பார்வையிட்டனர். latest Nike release | Air Jordan