Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th May 2023 20:47:45 Hours

கும்புறுப்பிட்டி அடர்ந்த காட்டில் சிக்கித் தவித்த மூன்று பெண்கள் மற்றும் ஆண் இராணுவத்தினரால் மீட்பு

கிழக்குப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 22 வது காலாட் படைப்பிரிவின் 221 வது காலாட் பிரிகேட்டின் 17 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினர் நள்ளிரவு மடுவான்குளம் மற்றும் பூனையாறு காடுகளில் காணாமல் போன நான்கு பேரை 9 மே 2023 திருகோணமலை கும்புறுப்பிட்டி காட்டில் இருந்து மீட்டுள்ளனர்.

திங்கட்கிழமை (8) பிற்பகல் விறகு மற்றும் பாலை பழங்களை சேகரிப்பதற்காக சென்ற பெண்கள் உட்பட பலர் அந்தக் காடுகளுக்குச் சென்றதாகவும், ஆனால் அந்த குழுவில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் மாலை வரையும் வீடு திரும்பும் வழியை தவறிவிட்டதாகவும் தகவல்கள் உறுதிப்படுத்தின.

இத் தகவலின் பேரில், கும்புறுப்பிட்டிய பொலிஸார் அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டறிய 221 வது பிரிகேட் தலைமையகத்தினரின் உதவியை நாடியதை தொடர்ந்து 17 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினர் குழு கிராம மக்களின் உதவியுடன் மாலை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இரவோடு இரவாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர், காணாமல் போன மூன்று பெண்களையும் ஆணையும் படையினர் கண்டுபிடித்து செவ்வாய்க்கிழமை (9) அதிகாலை பத்திரமாக அவர்களது கிராமத்திற்கு அழைத்து வந்தனர்.

அவர்கள் குடும்ப உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டதை தொடர்ந்து இராணுவத்தினரின் அயராத சேவைக்கு நன்றி தெரிவித்தனர்.

22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பி அமுனுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் 221 காலாட் பிரிகேட் தளபதி ஆகியோர் இத் திட்டத்தை உன்னிப்பாகக் கண்காணித்து, இந்த நடவடிக்கைக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினர்.