Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th April 2023 20:09:36 Hours

குடாநாட்டில் இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட 768 வது வீடு கட்டுடை பயனாளி குடும்பத்திற்கு வழங்கல்

இராணுவத்தின் அர்ப்பணிப்புத் திறன், நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மை ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்டு, அதிகளவான வெளிநாட்டு நன்கொடையாளர்கள் யாழ். குடாநாட்டில் உள்ள ஆதரவற்ற குடும்பங்களுக்காக இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் தற்போதைய வீடு நிர்மாணப் பணிகள் தடையின்றி தொடர்கின்றன.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பணிப்புரைக்கு அமைவாக 51 வது காலாட் படைப்பிரிவின் 513 வது பிரிகேடின் திறமையான படையினரால் யாழ். கட்டுடை, மானிப்பாய் (மேற்கு) பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 768 வது புதிய வீடு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. பெர்னாண்டோ ரேனுஷானின் குடும்பம் சரியான தங்குமிடம் இல்லாமல் வாழ்ந்து வந்த நிலையில் இராணுவ அதிகாரிகளால் அவதானிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களின் பரிதாபகரமான நிலைமையை கருத்திற்கொண்டு யாழ், பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தொடர்ச்சியான வீடு நிர்மாணத் திட்டத்திற்கு தீவிர ஆதரவாளராக இருந்த மேஜர் ஜெனரல் ரவி ரத்னசிங்கம் (ஓய்வு) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதற்கமைய கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள திரு.சின்னதுரை செந்திவேல் குடும்பத்தினர், காலஞ்சென்ற கட்டுடையைச் சேர்ந்த திரு,திருமதி தங்கம்மா சின்னதுரையின் நினைவாக, 'வன்னி எய்ட் கனடா', சிங்க கழகம் மோதர மட்டக்குளியுடன் இணைந்து மேஜர் ஜெனரல் ரவி ரத்னசிங்கம் (ஓய்வு) அவர்களின் ஒருங்கிணைப்பின் மூலம் இத்திட்டத்திற்கு நிதி அனுசரணையை வழங்கப்பட்டது.

2023 ஏப்ரல் 6 வியாழன், 51 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வஜிர வெலகெதர அவர்களின் அழைப்பின் பேரில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஸ்வர்ண போத்தொட்ட அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பதாதையை திரைநீக்கம் செய்து வைத்தார். அதற்கமைய மத அனுஷ்டானங்களுக்கு ஏற்ப குடும்பத்தினருக்கு இராணுவத்தால் புதிய வீடு வழங்கப்பட்டது. இதன் போது பயனாளியின் உறவினர்கள், கிராம மக்கள் முன்னிலையில் வீட்டுக்கான சாவி வழங்கப்பட்டது.

இத் திட்டம் 513 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம் ரிஸ்வி ராசிக் அவர்களின் ஆதரவு மற்றும் 11வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் கே.பி.சி.கே காரியவசம் அவர்களின் மேற்பார்வையில் 11வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் 768 வீடு நிர்மாணிக்கப்பட்டது.

இதன் போது பயனாளிகள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசுகள் மற்றும் உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடதக்கதாகும்.