Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd November 2023 23:04:59 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் தமிழ் - சிங்கள மொழி கற்பித்தல்

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினரால் கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்கள மற்றும் தமிழ் மாணவர்களுக்கான மொழி கற்பித்தல் திட்டமானது செவ்வாய்க்கிழமை (நவம்பர் 21) நெலும்வெவ மகா வித்தியாலயம் மற்றும் சிங்கபுர மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 200 சிங்கள மாணவர்களின் பங்குபற்றலுடன் ஆரம்பமானது.

இந்த ஒரு வருட கால தமிழ் மொழி பாடத்திட்டத்தின் ஆரம்ப விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ, 23 வது காலாட் படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதம அதிதி சமூகத்தில் ஒருவருக்கொருவர் மொழியைக் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தையும், அர்த்தமுள்ள நல்லிணக்க செயல்முறையை நோக்கிய அதன் நேர்மறையான விளைவுகளையும் வலியுறுத்தினார். மாணவர்களின் இருமொழி சரளத்தை மேம்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் இம் மொழி எதிர்காலத்தில் நிச்சயமாக ஒரு நன்மையாக இருக்கும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் முன்முயற்சியில் மட்டக்களப்பு ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் தமிழ் பேசும் பிள்ளைகளுக்கு சிங்கள மொழியை கற்பிக்கும் இதேபோன்ற வேலைத்திட்டம் சில நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.

சிங்கபுர மகா வித்தியாலயத்தின் உதவி அதிபர் திரு. நந்தசேன இந்த மாணவர்களுக்கு தமிழ் ஆசிரியராக பணியாற்றுகிறார், மேலும் அவருக்கு தமிழ் மொழியில் சரளமாகப் பேசும் இராணுவ வீரர்கள் ஆதரவு வழங்குவார்கள். இரண்டு பாடசாலைகளிலும் வார இறுதி நாட்களில் வகுப்புகள் நடைபெறுவதுடன், வள பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட உள்ளது, இது அப்பகுதியில் உள்ள நலம் விரும்பிகள் மற்றும் நன்கொடையாளர்களிடமிருந்து சேகரிக்கப்படுகிறது.

இந்த ஆரம்ப நிகழ்வில் திம்புலாகல வலயக் கல்விப் பணிப்பாளர், ஆசிரியர்கள் மற்றும் இரு பாடசாலைகளின் மாணவர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

கலாசார நிகழ்வுகள் ஆரம்ப விழாவிற்கு வண்ணம் சேர்த்தன.

23 வது காலாட் படைப்பிரிவின் 233 வது காலாட் பிரிகேட்டின் 9 வது இலங்கை பீரங்கி படையணியினரால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.