Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th September 2018 16:00:20 Hours

கிழக்கு படையினர்களால் பௌத்த தேரர்களுக்காக புதிய கட்டிடம் நிர்மாணிப்பு

கிழக்கு பாதுகாப்பு படையினரால் மட்டகளப்பு ஸ்ரீ மங்களராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் கடந்த (12) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை பௌத்த மத பூஜை வழிபாடுகளுடன் திறந்து வைக்கப்பட்டது. இப் பூஜைகளில் பௌத்த மத குருமார்கள், அரச அதிகாரிகள் உட்பட கிழக்கு பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் சன்துசித்த பனன்வல அவர்களும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்விற்கு ஸ்ரீ மங்களராம விகாரையின் விகாராதிபதி பூஜ்ய அம்பிட்டிய சுமனரத்ன அவர்களின் அழைப்பபை ஏற்று கிழக்கு பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் சன்துசித்த பனன்வல அவர்களினால் கல்வி அமைச்சின் நிதியுதவியுடன் புதிதாக நிர்மானிக்கப்பட்ட இக் கட்டிடம் பௌத்த மதகுருமார்களின் மத்தியில் திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் உயிர் வாழும் அனைத்து மக்களின் சகிப்புத்தன்மை,புரிதல் மற்றும் சமய ஒத்துழைப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை கருத்திற் கொண்டு கடந்த காலகட்டத்தில், கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையகம் முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்களுக்கு பங்களிப்பு வழங்கினர். அதன்படி மட்டக்களப்பு மாமங்க பிள்ளையார் கோவில் நிர்மாண பணிகள், மட்டக்களப்பில் பிஷப் இல்லத்தின் கத்தோலிக்க இறையியல் நிறுவனத்தின் நிர்மாண பணிகள் போன்ற பல திட்டங்களும் மேற் கொள்ளப்பட்டனர்.

231 ஆவது படைப் பிரிவின் தளபதி பிரிகேடியர் செனராத் நிவுன்ஹெல்ல அவர்களின் வழிக்காட்டல் மற்றும் ஆலோசனைக்கமைய இந்த படைப் பிரிவுக்கு கீழ் இயங்கும் 10 ஆவது கஜபா படையணி மற்றும் 11 ஆவது சிங்க படையணியின் படையினர்களின் தொழில்நுட்ப அறிவு மற்றும் புரிதலைப் பயன்படுத்தி; ஸ்ரீ மங்களராம விகாரையில் புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது. இவ் விகாரையின் திறப்பு விழாவின் கலந்து கொணட அனைத்து அங்கத்வர்களும் இக் கட்டிடத்தை நிர்மாணிக்க இலங்கை இராணுவத்தால் வழங்கிய பங்களிப்பை பாராட்டியதுடன் பௌத்த மதகுருவினால் ஆசிர்வாதமும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்விற்கு புலுகுனாவை ரஜ மகா விகாரையின் விகாராதிபதி பூஜ்ய கிரிந்திகம சோமரதன சுவாமின் வஹன்சே, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் எம் உதய குமார, கிழக்கு மாகணத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிகாரி கபில ஜயசேகர, 231 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பரிகேடியர் நிவுன்ஹெல்ல, உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளூர் பிரதிநிதிகள்,பிரதேச வாசிகள் பௌத்த மக்களும் அதிதிகளும் பிரதேச வாசிகளும் கலந்து கொண்டனர். Sportswear free shipping | Releases Nike Shoes