Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th January 2024 20:27:53 Hours

கல் ஓயா நீர்த்தேக்கத்தில் 24 வது காலாட் படைப்பிரிவு படையினர் விரைவு நடவடிக்கையில்

24 வது காலாட் படைப்பிரிவு படையினர் ஒலுவில் மற்றும் கல்மடுவ பிரதேசத்திற்கு அருகில் உள்ள கல் ஓயா நீர் தேக்கத்தில் அதிக மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் விளைவாக ஒலுவில்-தீகவாபிய வீதி மற்றும் கல் ஓயா முதல் பரகஹகல வரையிலான வீதிகளில் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கல் ஓயா நீர் மட்டம் மேலும் நிரம்பி வழிவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன், நீர்த்தேக்கத்தின் ஓரத்தில் இராணுவத்தினர் மண் மூட்டைகளை வைத்து தடுப்புகளை ஏற்படுத்தினர். இந்த கூட்டு முயற்சிக்கு ஒலுவில் வீரயடி நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பொறியியலாளர் ஆலோசனை வழங்கியதுடன், பொதுமக்களும் உதவினர்.

இதற்கிடையில், சாய்ந்தமருது, நிந்தவூர் மற்றும் அக்கரைப்பற்று பகுதிகளுக்கான பிரதான நீர் விநியோகம் மண் அரிப்பு காரணமாக மிடிந்துபுரவிற்கு அருகில் தடைப்பட்டது. இத் தடை ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளை உணர்ந்து, இலங்கை விமானப்படை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையுடன் இணைந்து 24 வது காலாட் படைப்பிரிவின் படையினர் குழாயைச் சுற்றி மணல் மூட்டைகளை வைத்து பிரச்சினையை சீர் செய்வதனர்.