Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th June 2023 20:30:51 Hours

கஜபா படையணியின் முன்னாள் படைவீரர் இராணுவத் தளபதியை சந்திப்பு

கஜபா கிடிம்பத்தின் சிரேஷ்ட படைவீரர்களில் ஒருவரான மேஜர் ஜெனரல் ஜிவீடீயுஏ பெரேரா (ஓய்வு) ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ யுஎஸ்ஏடபிள்யுசி பீஎஸ்சி அவர்கள் இன்று (15 ஜூன் 2023) காலைஇராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்களை இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.

ஏப்ரல் 2017 இல் இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற கஜபா படையணியின் பெருமைமிக்க தயாரிப்புகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ஜிவிடீயுஏ பெரேரா (ஓய்வு) அவர்கள் இராணுவத்திற்கு செயல்பாட்டு, நிர்வாக மற்றும் கல்வி நிலைகளில் குறிப்பிடத்தக்க விரிவுரையாளர் சேவையை வழங்கியுள்ளார். அத்துடன் இன்றுவரை ஒரு புகழ்பெற்ற கல்வியாளராக இருக்கிறார்.

இச் சந்திப்பின் போது, இராணுவத் தளபதி தனது 34 வருடங்களுக்கும் மேலான பணிக்காலத்தின் போது மாறுபட்ட மற்றும் பொறுப்பான நியமனங்களில் இராணுவத்திற்கு மதிப்புமிக்க பங்களிப்பை வழங்கிய கஜபா படையின் சிரேஷ்ட அதிகாரிக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.