Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th January 2024 20:27:28 Hours

ஓய்வுபெறும் யாழ் தளபதிக்கு இராணுவ தளபதியின் பாராட்டு

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 35 வருட பணியின் பின்னர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னதாக (09 ஜனவரி) மாலை இராணுவ தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை குடும்ப உறுப்பினர்களுடன் சந்தித்தார்.

இச் சந்திப்பின்போது, இராணுவத் தளபதி, ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சேவைகளைப் பாராட்டியதுடன், போர் சந்தர்ப்பத்திலும் போருக்குப் பின்னரான நினைவுகளை நினைவு கூர்ந்தார். இராணுவத் தளபதி அவரது எதிர்காலத் திட்டங்கள், வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

ஓய்வு பெறும் மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுடன் சில இன்பங்களைப் பகிர்ந்து கொண்ட இராணுவத் தளபதி அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். ஓய்வு பெறும் அதிகாரியின் குடும்ப உறுப்பினர்கள் அவரது சவாலான பணிகளில் அவருக்கு அளித்த ஆதரவையும் அவர் பாராட்டினார்.

ஓய்வு பெறும் மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் நிறுவனத்தில் சேவையாற்றிய காலத்தில் வழங்கிய வழக்காட்டல்கள் மற்றும் வாழ்த்துகளுக்கு இராணுவத் தளபதிக்கு நன்றி தெரிவித்தார்.

சந்திப்பின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் குடும்பத்திற்கு ஒரு சிறப்பு பரிசு வழங்கியதுடன் பாராட்டுக்கான அடையாளமாக வெளியேறும் சிரேஷ்ட அதிகாரிக்கு நினைவுச் சின்னத்தை வழங்கினார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் விவரம் கீழ்வருமாறு

ஓய்வு பெறும் மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 1988 ஆம் ஆண்டு ஒக்டோபர் 06 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்தார். அவர் இரண்டாம் லெப்டினனாக பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி ஆகியவற்றில் அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்ற கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் பாடநெறி 6 இன் வீரராவர். பயிற்சியின் பின் இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் இணைக்கப்பட்டார். இராணுவத்தில் பணிபுரியும் காலப்பகுதியில் தொடர்ந்து அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்த்தப்பட்ட அவர் 02 ஆகஸ்ட் 2021 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

அவர் ஓய்வுபெறும் போது யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியாகவும், இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் பதில் படைத் தளபதியாகவும் பதவி வகித்தார். 4 வது இலேசாயுத காலாட் படையணியின் குழு தளபதி, 2 வது காலாட் படைப்பிரிவு பொது பணி அதிகாரி 3 (செயல்பாடு), 4 வது இலேசாயுத காலாட் படையணியின் அதிகாரி கட்டளை, காலாட் படையணி பயிற்சி நிலையத்தின் பயிற்சி பிரிவின் நிறைவேற்று அதிகாரி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பயிலிளவல் அதிகாரி பயிற்சி பிரிவின் பயிற்றுவிப்பு அதிகாரி, 552 வது காலாட் பிரிகேட்டின் பிரிகேட் மேஜர், 4 வது வது இலேசாயுத காலாட் படையணியின் செயல்பாடுகள் மற்றும் பயிற்சி அதிகாரி, இராணுவ தலைமையகத்தில் வழங்கல் மற்றும் போக்குவரத்து பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி 2 (விநியோகம் மற்றும் போக்குவரத்து), ஹைட்டி ஐநா அமைதி காக்கும் பணியின் இலங்கை படையின் கட்டளை அதிகாரி, 55 வது காலாட் படைப்பிரிவின் பணிநிலை அதிகாரி 2 (செயல்பாடுகள்/பயிற்சி), 15 வது இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, ஹைட்டி ஐநா அமைதி காக்கும் பணி படைத் தலைமையகத்தின் பணிநிலை அதிகாரி (பிரதி தளபதி யூ9), பொதுப் பணி நிலை அதிகாரி 1 (செயல்பாடுகள்), தெற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பொதுப் பணி அதிகாரி 1 (செயல்பாடுகள்), மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பொதுப் பணி அதிகாரி 1 (செயல்பாடுகள்), இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் தளபதி, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேணல் பொது பணி, இராணுவ தலைமையகத்தின் பொதுப் பணி கிளையின் கேணல் பொது பணி,521 மற்றும் 582 வது காலாட் பிரிகேட்டின் பிரிகேட் தளபதி, இலங்கை தேசிய பாதுகாப்பு கல்லூரியின் சிரேஷ்ட பணிப்பாளர், 62 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி போன்ற பதவிகளையும் வகித்துள்ளார்.

போர்க்களங்களில் அவரது வீரம் மற்றும் துணிச்சலுக்காக, அவருக்கு ‘ரண விக்கிரம பதக்கம்’ மற்றும் ‘ரண சூரபதக்கம்’ என்பன வழங்கப்பட்டுள்ளன.

அவர் தனது இராணுவ வாழ்க்கையில் அணித் தலைவர் போர்த் தலைமைப் பாடநெறி, படையலகு ஆதரவு ஆயுத பாடநெறி, சர்வதேச மனிதாபிமான சட்டம் மனித உரிமைகள் பாடநெறி, அடிப்படை பாராசூட் பாடநெறி, இராணுவ கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி, இளம் அதிகாரிகளின் காலாட்படை பாடநெறி – பாகிஸ்தான், கனிஷ்ட கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி – பங்களாதேஷ், சிரேஷ்ட கட்டளைப் பாடநெறி – இந்தியா, சர்வதேச பாதுகாப்பு அதிகாரிகள் பயிற்சி பாடநெறி - வியட்நாம் மற்றும் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறி – சீனா போன்ற பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகளை பயின்றுள்ளார்.

சிரேஷ்ட அதிகாரி இந்தியா தேவி அஹில்யா விஸ்வ வித்யாலயவில் பாதுகாப்பு முகாமை முதுநிலை பாடநெறி, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் இளங்கலை கலை பட்டம் (பாதுகாப்பு ஆய்வுகள்) மற்றும் சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மூலோபாய ஆய்வுகளில் இராணுவ அறிவியல் முதுகலைப் பாடநெறி சீனா போன்ற பல இராணுவம் மற்றும் இராணுவம் அல்லாத உயர் கல்விகளையும் பின்பற்றியுள்ளார்.