Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th November 2023 21:57:05 Hours

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் ஜி.டபிள்யூ.ஏ செனவிரத்ன அவர்களுக்கு இராணுவ தளபதி பாராட்டு

54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.டபிள்யூ.ஏ செனவிரத்ன யுஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 34 வருட காலச் சிறப்புமிக்க பணியின் பின் இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்று செல்லும் முன் இன்று (நவம்பர் 10) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை குடும்ப உறுப்பினர்களுடன் சந்தித்தார்.

சந்திப்பின் போது, இராணுவத் தளபதி ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரியின் சேவைகளைப் பாராட்டியதுடன், போர்க்களம் மற்றும் போருக்குப் பிந்தைய சூழ்நிலையில் நினைவுகளை நினைவு கூர்ந்தார். இராணுவத் தளபதி அவரது எதிர்காலத் திட்டங்களைக் கேட்டறிந்ததுடன், அவரது எதிர்கால முயற்சிகள் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இராணுவத் தளபதி ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் ஜி.டபிள்யூ.ஏ செனவிரத்ன யுஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களுடன் அவரது மனைவியுடன் சில இன்பங்களைப் பகிர்ந்து கொண்டார். ஓய்வு பெற்றவரின் குடும்ப உறுப்பினர்கள் ஓய்வுபெற்று செல்லும் அதிகாரிக்கு அவரது சவாலான கடமைகளில் வழங்கிய ஆதரவையும் நினைவு படுத்தினார்.

மேஜர் ஜெனரல் ஜி.டபிள்யூ.ஏ செனவிரத்ன யுஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் மேலும் இராணுவத் தளபதியின் விருப்பத்திற்கும் வழிகாட்டலுக்கும் நன்றி தெரிவித்ததுடன், அமைப்பில் தான் சேவையாற்றிய காலத்தில் பெற்ற அனுபவங்களையும் சுற்றிகாட்டினார்.

சந்திப்பின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் குடும்பத்திற்கு ஒரு சிறப்பு பாராட்டு பரிசும் ஓய்வு பெற்றுசெல்லும் அதிகாரிக்கு சிறப்பு நினைவுச் சின்னத்தையும் வழங்கினார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் வருமாறு

மேஜர் ஜெனரல் ஜி.டபிள்யூ.ஏ செனவிரத்ன யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் 1989 நவம்பர் 14 அன்று இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரி மற்றும் தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி ஆகியவற்றில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், அவர் இரண்டாம் லெப்டினனாக 1991 நவம்பர் 14 இல் இலங்கை பொறியியல் படையணியில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் பணிபுரிந்த காலப்பகுதியில் தொடர்ந்து அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்த்தப்பட்டு பின்னர், 2023 பெப்ரவரி 04 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

அவர் ஓய்வுபெறும் போது 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக பதவி வகிக்கின்றார். அவர் படைக்குழு தளபதி 5 வது களப் பொறியியல் படையணி, நிறைவேற்று அதிகாரி, அணி கட்டளையளர், பணிநிலை அதிகாரி 3 - பொறியியல் பிரிகேட், அணி கட்டளையளர் 7 வது களப் பொறியியல் படையணி, படை கட்டளையளர் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி, அணி கட்டளையளர் 6 வது களப் பொறியியல் படையணி, இராணுவ பாதுகாப்பு கல்வியற் கல்லூரி அதிகாரிகள் கற்றல் நிலைய பணிநிலை அதிகாரி, இராணுவ கல்வியற் கல்லூரி அதிகாரிகள் கற்கை நிலைய சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி அதிகாரிகள் கற்கை நிலைய பிரதம பயிற்றுவிப்பாளர், பணிநிலை அதிகாரி 1 (திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி பிரிவு) பாதுகாப்பு பதவி நிலைபிரதானி காரியாளயம், 9 வது களப் பொறியியல் படையணி கட்டளை அதிகாரி, மினுஸ்மா யூ1 பிரிவு பிரதி பிரதம இராணுவ அதிகாரி, பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி பணிநிலை அதிகாரி, 51 வது காலாட் படைப்பிரிவு கேணல் பொதுப்பணி, , யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக கேணல் பொது பணி, பாதுகாப்புச் சேவைகள் மற்றும் பதவதாரிகள்கல்லூரி பயிற்சிக் குழு பிரதானி, 543 வது காலாட் பிரிகேட் தளபதி, ஆலை பொறியியல் பிரிகேட் தளபதி, பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி பிரதி தளபதி, ஆய்வுகள் மற்றும் கோட்பாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர், ஆய்வுகள் மற்றும் கோட்பாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

அவர் பல உள்நாட்டு வெளிநாட்டு கற்கைகளையும் பின்பற்றியுள்ளார். அவையாவன பீரங்கி கண்காணிப்பு பாடநெறி, அகழ்வு நடவடிக்கை முகாமை பாடநெறி, இரசாயன உயிரியல் கதிரியக்கவியல் மற்றும் அணுசக்தி அடிப்படைப் பாடநெறி, இராணுவ கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி, இந்திய இளம் அதிகாரிகள் பாடநெறி, இந்திய சிரேஷ்ட கட்டளை பாடநெறி, பாகிஸ்தான் மனிதபிமான கண்ணிவெடி அகற்றும் பயிற்சி பாடநெறி, பாகிஸ்தான் கட்டளை மற்றும் பணிநிலை கல்லூரி பாடநெறி, பாகிஸ்தான் வெடிகுண்டு அகற்றல் பாடநெறி.

கொழும்பு பல்கலைக்கழக வியாபார கற்கைகள் முதுமானி, பலுசிஸ்தான் பல்கலைக்கழக அறிவியல் முதுமானி (கலை மற்றும் நலன்புரி அறிவியல்), இளங்கலை பட்டம் (பாதுகாப்பு ஆய்வுகள்) ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி, பட்ட பின் படிப்பு முகாமைத்துவ டிப்லோமா இலங்கை திறந்த பல்கலைக்கழகம், உயர் டிப்லோமா பாதுகாப்பு முகாமை இந்திய தேவிஅஹிலியா பல்கலைக்கழகம் போன்ற இராணுவம் அல்லாத உயர் கல்வியையும் பொற்றுள்ளார்.