Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th May 2023 19:00:30 Hours

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் ஏஎல் இளங்ககோன் அவர்களுக்கு இராணுவத் தளபதி வாழ்த்து

முல்லைத்தீவு முன்னரங்கு பராமரிப்புப் பிரதேசத்தின் தளபதியும், இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎல் இளங்ககோன் அவர்கள், 34 வருடங்களுக்கும் மேலாக இராணுவத்தில் சேவையாற்றி ஓய்வு பெறுவதற்கு ஆறு நாட்களுக்கு முன்னர் இராணுவத் தளபதியின் அலுவலகத்திற்கு அவரது குடும்ப உறுப்பினர்களுடன் வெள்ளிக்கிழமை (11) பிற்பகல் அழைக்கப்பட்டிருந்தார்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள், ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியுடனான சந்திப்பின் போது அனுபவம் வாய்ந்த ஒழுக்க அதிகாரியாகப் போற்றத்தக்க பணியின் போது குறிப்பிடத்தக்க பணிகளை நினைவு கூர்ந்தார். அவரது அர்ப்பணிப்பு மிக்க சேவை மற்றும் பல்வேறு பொறுப்புகளை தவறாது அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற செயல்பாட்டிற்காக இராணுவ தளபதி பாராட்டினார்.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் உச்சக்கட்டத்தின் போது, மே 2009 க்கு முன்னர் மிக உயர்ந்த பதவியில் இருந்த ஒர் அதிகாரியாக ஓய்வு பெறுபவரின் பங்களிப்பு மற்றும் மதிப்புமிக்க வகிப்பங்குகள் பற்றிய நினைவுகளைப் புதுப்பித்து, அன்றைய அழைப்பாளருடன் சில நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.

முல்லைத்தீவு முன்னரங்கு பராமரிப்பு பிரதேசத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎல் இளங்ககோன் அவர்கள் தனது பதவி காலத்தில் செயல் திறனாக செயல் படுவதற்கு தளபதியினால் தமக்கு எல்லா நேரங்களிலும் வழங்கப்பட்ட வழிகாட்டுதலை நன்றியுடன் ஏற்றுக்கொண்டதுடன், இராணுவத் தளபதியின் அழைப்பிற்கு நன்றி தெரிவித்தார்.

இராணுவத் தளபதி அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதுடன், இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்ட ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்கால முயற்சிகள் மற்றும் திட்டங்களையும் கேட்டறிந்தார். சிரேஷ்ட அதிகாரிக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது வாழ்க்கை முழுவதும் குறிப்பாக சவாலான காலங்களில் வழங்கிய விலைமதிப்பற்ற ஆதரவையும் அவர் பாராட்டினார்.

சந்திப்பின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டு சின்னமாக சிறப்பு நினைவுச் சின்னம் மற்றும் குடும்பத்திற்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் ஏஎல் இளங்ககோன் 1988 ஆம் ஆண்டு ஒக்டோபர் 06 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் இனைந்து கெண்டதுடன், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் பயிலிளவல் பாடநெறி 32 பி இல் இராணுவப் அடிப்படை பயிற்சியைப் பெற்றதுடன், 2 ம் லெப்டினன் நிலைக்கு நியமிக்கப்பட்டு இலங்கை இராணுவ பொலிஸ் படையணியில் பணியமர்த்தப்பட்டார். அவர் 14 செப்டம்பர் 2021 அன்று மேஜர் ஜெனரலாக நிலை உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அவர் ஓய்வுபெறும் போது முல்லைத்தீவு முன்னரங்கு பராமரிப்புப் பிரதேசத்தின் தளபதி மற்றும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதி ஆகிய பதவிகளை வகிக்கின்றார். அவர் இதற்கு முன்னர் 1 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் ஒழுக்க அதிகாரி, 1 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் நிறைவேற்று அதிகாரி, ஒழுக்க பணிப்பகத்தின் பொதுப்பணி அதிகாரி 2, 513 வது காலாட் பிரிகேட் மேஜர் நிர்வாகம் மற்றும் விடுதி, 1 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி போன்ற பதவிகளை வகித்துள்ளார்.

இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் கட்டளை அதிகாரி, இலங்கை ஒழுக்க படையலகின் குழு அதிகாரி , ஹைட்டி உள்ள ஐக்கிய நாடுகளின் நிலைப்படுத்தல் பணி, வடக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேசத்தின் பணிநிலை அதிகாரி 1,, 2,3 வது மற்றும் 4வது பொலிஸ் படையணிகளின் கட்டளை அதிகாரி, இராணுவ பொலிஸ் படையணி பாடசாலையின் தளபதி, சிறப்பு புலனாய்வு பிரிவின் கட்டளை அதிகாரி, இராணுவ தலைமையகத்தின் ஆளனி நிர்வாக பணிப்பகத்தின் கேணல் (நிர்வாகம்), இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தின் நிலையத் தளபதி மற்றும் இராணுவ தலைமையகத்தின் ஒழுக்க பணிப்பாளர் நாயகம் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார்.

அவரது சேவைக் காலத்தில், இளம் அதிகாரிகள் பாடநெறி, அதிகாரிகள் திறன் பாடநெறி, கனிஷ்ட கட்டளை பாடநெறி, சிரேஷ்ட துப்பறியும் டிப்ளமோ பாடநெறி, இந்தியா ஒழுக்க அதிகாரி பாடநெறி, பாகிஸ்தான் அதிகாரிகளின் குற்றப் புலனாய்வுப் பாடநெறி, பாதுகாப்பு முகாமை பாடநெறி உள்ளிட்ட பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பாடநெறிகளையும் தொடர்ந்துள்ளார்.