Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th November 2023 00:33:36 Hours

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் எல்.சி.ஆர் ஜயசூரிய அவர்களின் சேவைக்கு பாராட்டு

இராணுவ புலனாய்வுப் படையணியின் படைத் தளபதியும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தின் பீடாதிபதியுமான மேஜர் ஜெனரல் எல்.சி.ஆர் ஜயசூரிய ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்கள் 34 வருடகால பணியின் பின்னர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் இன்று (நவம்பர் 17) பிற்பகல் குடும்ப உறுப்பினர்களுடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது, இராணுவத் தளபதி ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரியின் சேவைகளைப் பாராட்டியதுடன், போர்க்களம் மற்றும் போருக்குப் பின்னரான சூழ்நிலையின் நினைவுகளையும் நினைவு கூர்ந்தார். இராணுவத் தளபதி அவரது எதிர்காலத் திட்டங்கள் மற்றும் வாய்ப்புகளை கேட்டறிந்ததுடன், அவரது எதிர்கால முயற்சிகள் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தார்.

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் எல்.சி.ஆர் ஜயசூரிய ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்களுடன் சில இன்பங்களைப் பகிர்ந்து கொண்ட இராணுவத் தளபதி, உடனிருந்த அவரது மனைவியுடனும் சில வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டார். ஓய்வு பெற்றவரின் குடும்ப உறுப்பினர்கள் ஓய்வுபெற்று செல்லும் அதிகாரிக்கு அவரது சவாலான கடமைகளில் வழங்கிய ஆதரவையும் நினைவு படுத்தினார்.

மேஜர் ஜெனரல் எல்.சி.ஆர் ஜயசூரிய ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்கள் மேலும் இராணுவத் தளபதியின் விருப்பத்திற்கும் வழிகாட்டலுக்கும் நன்றி தெரிவித்ததுடன், அமைப்பில் தான் சேவையாற்றிய காலத்தில் பெற்ற அனுபவங்களையும் திறமையான வழிகாட்டுதல்களையும் சுற்றிகாட்டினார்.

சந்திப்பின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டு சின்னமாக விசேட நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கியதுடன் குடும்ப உறுப்பினர்களுக்கு விசேட பரிசுகளையும் வழங்கினார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான வரலாறு பின்வருமாறு’

மேஜர் ஜெனரல் எல்.சி.ஆர் ஜயசூரிய ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்கள் 1989 ஜனவரி 01 அன்று இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி மற்றும் இந்திய கல்வியற் கல்லூரியின் பாடநெறி 31 இல் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர் அவர் 05 ஒக்டோபர் 1990 அன்று இரண்டாம் லெப்டினன் நிலையில் சிங்க படையணியில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் இராணுவ புலனாய்வுப் படையணிக்கு மாற்றப்பட்டார். இராணுவத்தில் பணிபுரிந்த காலப்பகுதியில் தொடர்ந்து நிலை உயர்வுகளை பெற்ற அவர், 2021 ஒக்டோபர் 10 அவர் மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்த்தப்பட்டார்.

அவர் ஓய்வுபெறும் போது இராணுவ புலனாய்வுப் படையணியின் படைத் தளபதியாகவும் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தின் பீடாதிபதியாகவும் பதவி வகிக்கிறார். இவர் 1 வது சிங்கப் படையணியின் குழு கட்டளை அதிகாரி, 1 வது சிங்கப் படையணியின் புலனாய்வு அதிகாரி, மறைந்த மேஜர் ஜெனரல் ஜி.பீ குலதுங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் உதவியாளர், 1 வது சிங்கப் படையணி கட்டளை அதிகாரி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி பயிலிளவல் பயிற்சி பிரிவின் அதிகாரி பயிற்றுவிப்பாளர், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி நிறைவேற்று அதிகாரி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி கல்வி நிலையத்தின் பணிப்பாளர், 21 வது காலாட் படைப்பிரிவின் பொதுப் பணிநிலை அதிகாரி 2 (செயல்பாடுகள்/பயிற்சி), இராணுவத் தலைமையக இராணுவ புலனாய்வு பணிப்பகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 2 (பதிவு மற்றும் ஆராய்ச்சி), இராணுவத் தலைமையக இராணுவ புலனாய்வு பணிப்பகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1, இராணுவத் தலைமையகத்தின் உத்தியோகபூர்வ இராணுவ தளபதி உதவியாளர், பிரான்சில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முதல் செயலாளர், இராணுவ புலனாய்வு படையணியின் கட்டளை அதிகாரி, இராணுவத் தலைமையக இராணுவ புலனாய்வு பணிப்பகத்தின் கேணல் புலனாய்வு, இராணுவத் தலைமையக இராணுவ புலனாய்வு பணிப்பகத்தின் மேற்பார்வையாளர், 653 வது காலாட் பிரிகேட் தளபதி, பாதுகாப்பு அமைச்சின் தேசிய புலனாய்வுத் அலுவலகத்தின் சிரேஷ்ட புலனாய்வு ஒருங்கிணைப்பாளர், இராணுவத் தலைமையகஇராணுவப் புலனாய்வு பணிப்பகத்தின் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் மற்றும் இராணுவத் தலைமையக இராணுவ புலனாய்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

போர்க்களங்களில் அவரது வீரம் மற்றும் துணிச்சலுக்காக, அவருக்கு ‘ரண விக்ரம பதக்கம்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

அவர் தனது இராணுவ வாழ்க்கையில் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகளை பின்பற்றியுள்ளார். குழு கட்டளை அதிகாரி தந்திரோபாய பாடநெறி, இராணுவ கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி, முன் அதிகாரவாணை பயிற்சி வகுப்பு - இந்திய கல்வியற் கல்லூரி, டேராடூன், இந்தியா, இளம் அதிகாரிகளின் காலாட் படை பாடநெறி - பாகிஸ்தான், கனிஷ்ட கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி - பங்களாதேஷ், சிரேஷ்ட கட்டளை பாடநெறி - இந்தியா மற்றும் பாதுகாப்பு மற்றும் மூலோபாய பாடநெறி - இந்தியா.

சிரேஷ்ட அதிகாரி, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளில் முதுகலை அறிவியல் மற்றும் இந்தியாவின் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளில் முதுகலை தத்துவம் போன்ற இராணுவம் அல்லாத பல உயர் கல்வி பாடநெறிகளையும் பின்பற்றியுள்ளார்.