Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th August 2022 19:07:34 Hours

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சிறப்புமிக்க சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

56 வது படைப்பிரிவின் முன்னாள் தளபதியான இலங்கை பீரங்கிப் படையணியை சேரந்த ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் எல்.டி.எஸ்.எஸ் லியனகே RSP USP psc Hdmc, அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன் செவ்வாய்க்கிழமை (30) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை சந்தித்தார்.

34 வருடங்களுக்கும் மேலாக இராணுவத்தில் முன்மாதிரியாக சேவையாற்றிய சிரேஷ்ட அதிகாரி, விரைவில் ஓய்வு பெறவுள்ளார் என்பதுடன் அவரினால் வழங்கப்பட்ட குறிப்பிடத்தக்க சிறந்த சேவை மற்றும் அயராத அர்ப்பணிப்பு சேவைக்கு இராணுவத் தளபதி தனது பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் மே 2009 க்கு முன்னர் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் உச்சக்கட்டத்தில் உள்ள போது துப்பாக்கி ஏந்திய அதிகாரியாக திகழ்ந்து வழங்கிய விலைமதிப்பற்ற தியாகங்கள் மற்றும் அர்ப்பணிப்புப் பணிகளையும் இதன்போது தளபதி நினைவு கூர்ந்தார்.

"எதிரிகளுடனான போர் கடுமையாக இருந்த நேரத்தில் போர்க்களத்தில் தடையற்ற பீரங்கி ஒத்துழைப்பை நீங்கள் திறமையாக வழங்கியுள்ளீர்கள். இது ஒரு கடினமான பணியாகும், மேலும் நீங்கள் அச்சமின்றி அந்த பொறுப்புகளை துல்லியமாக செய்தீர்கள், இதற்கு நாங்கள் அனைவரும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்," என்று தளபதி குறிப்பிட்டார்.

இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்ட அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சில எண்ணங்களை பகிர்ந்து கொண்ட இராணுவத் தளபதி, ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்கால முயற்சிகள் மற்றும் திட்டங்களை ஆராய்ந்து அவருக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இராணுவத்தில் இருந்து வெளியேறும் சிரேஷ்ட அதிகாரி தனது கடமைகளை சிறப்பாக மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்கியமைக்காக அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தனது பாராட்டுக்களை தளபதி தெரிவித்தார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியும் இராணுவத் தளபதியின் வாழ்த்துக்களுக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி தெரிவித்ததுடன், தனது கடமைகளை நிறைவேற்றுவதில் அவரிடம் இருந்து தாம் பெற்ற ஊக்கத்தையும் குறிப்பிட்டார். உரையாடலின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்கள் பாராட்டுக்கான அடையாளமாக ஓய்வு பெறும் மேஜர் ஜெனரலுக்கு நினைவு நினைவுச் சின்னத்தை வழங்கியதோடு அவரின் குடும்பத்திற்கு சிறப்பு நினைவு பரிசினையும் வழங்கினார்.

56 வது படைப்பிரிவின் தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர், இந்த சிரேஷ்ட அதிகாரி தனது பதவிக்காலத்தில் நாடளாவிய இராணுவ படைப்பிரிவுகளில் கட்டளை மற்றும் பதவி நிலை உள்ளிட்ட பல முக்கிய நியமனங்களை வகித்துள்ளார். அந்த பதவிக்கு முன்னராக பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலகத்தின் பொதுப்பணி பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ளார். 1988 ஜூலை 26 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் கெடட் அதிகாரியாக இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் நியமிக்கப்பட்ட அவர், இரண்டாவது லெப்டினனாக 05 ஒக்டோபர் 1990 இல் இலங்கை இராணுவ பீரங்கிப் படையணியில் நியமிக்கப்பட்டார்.

அவர் தனது மூன்று தசாப்த கால சேவையின் போது 16 வது கள இலங்கை பீரங்கிப் படையணியின் கட்டளை அதிகாரி, 7 வது இலேசாயுத பீரங்கிப்படையணி, 663 வது பிரிகேட் தளபதி, 611 வது பிரிகேட் தளபதி, இராணுவ வழங்கள் தளபதி, கிளிநெச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவிநிலை அதிகாரி உள்ளிட்ட சில முக்கிய நியமனங்களையும் வகித்துள்ளார்.

சிரேஷ்ட அதிகாரி இலங்கை இராணுவத்தில் பணியாற்றிய காலத்தில் ரண சூர பதக்கம் (RSP), உத்தம சேவா பதக்கம் (USP) மற்றும் மேலும் சில பதக்கங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளார்.