Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th October 2022 18:27:45 Hours

'ஒற்றுமையே பலம்' என்ற தொனிப்பொருளில் பெருமைமிகு கஜபா படையணியின் 39 வது ஆண்டு நிறைவு கொண்டாட்டம்

இலங்கை இராணுவத்தின் பெருமைமிக்க மற்றும் கடும் போர் ஆற்றல் கொண்ட படையணிகளில் ஒன்றான கஜபா படையணி தனது 39 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் ஒக்டோபர் 14 ஆம் திகதியை சிவப்பு எழுத்து தினமாக அல்லது மறக்கமுடியாத கஜபா படையணி தினமாகக் கருதுகின்றதுடன் நிகரற்ற வீரம் மற்றும் வீர சரித்திரத்தில் இணைந்த காலாட்படை வீரர்களின் ஒரு பிணைக்கப்பட்ட குடும்பமாக ஒருவருக்கொருவர் புத்துணர்ச்சியூட்டும் நினைவுகள் மற்றும் தொடர்பைக் கொண்டுவரும் நாளாகம் இந் நாள் கொண்டாடப்படுகின்றது.

சாலியபுர கஜபா படையணி தலைமையகத்திற்கு நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் சேவைபுரியும் கஜபா படையணி படையினரின் குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை (14) தம்முடைய நினைவு பாதையில் ஒரு பயணமாக அழைத்துச் சென்றது. 1983 ஆம் ஆண்டு மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்னவினால் ஸ்தாபிக்கப்பட்ட புகழ்பெற்ற படைப்பிரிவின் 39 வது ஆண்டு மைல்கல்லை நினைவுகூரும் வகையில் இராணுவத் தளபதியும் கஜபா படையணியின் படைத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

ஆண்டு நிறைவு தினத்தில் (14) கஜபா படையணி தலைமையக நுழைவாயிலில் பிரதம அதிதியான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் அங்கு பிரதி நிலைய தளபதி கேணல் கேஆர் களுபஹன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவரை அன்புடன் வரவேற்றார். தொடர்ந்து கஜபா படையணி ஸ்தாபகத் தந்தை மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்னவின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு ஆண்டுவிழா அணிவகுப்பில் அன்றைய பிரதம அதிதி கலந்து சிறப்பிப்பதற்கா அழைத்து செல்லப்பட்டார். அணிவகுப்பு மைதானத்தின் நுழைவாயிலில் கஜபா படையணி நிலைய தளபதி பிரிகேடியர் எச்டிடபிள்யூ வித்யானந்த ஆர்டப்ள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களினால் அணிவகுப்பு மரியாதையினை பகுப்பாய்வு செய்வதற்காக சிறப்பு மேடைக்கு இராணுவ தளபதி அழைக்கப்பட்டார். அணிவகுப்புத் தளபதியுடன் இணைந்து அனைத்து கஜபா படையின் 22 அதிகாரிகள் 502 சிப்பாய்கள் பெருமையுடன் அணிவகுத்த ஜனாதிபதி மற்றும் ரெஜிமென்ட் வர்ணங்களுடன் கொண்ட நேர்த்தியான அணிவகுப்பை தளபதி ஏற்றுக் கொண்டார்.

அடுத்து படையணியின் படைத் தளபதி படையினருக்கு உரையாற்றுகையில் 39 ஆண்டுகால கஜபா படையணி அனைத்து படையினரின் தாய்நாட்டிற்கான அர்ப்பணிப்பு மற்றும் நிகழ்வுகள் நிறைந்த பயணம் ஆகியவற்றை சுருக்கமாகக் கூறினார். மேலும், வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகங்களுக்கு தனது உயரிய மரியாதையை செலுத்திய அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்தித்தார்.

அணிவகுப்பின் முடிவில் இராணுவத் தளபதி நாக மரக் கன்று ஒன்றினை நாட்டியதுடன் குழு படம் எடுத்தல் மற்றும் படையினருடன் மதிய உணவு எடுத்தல் என்பவற்றிலும் கலந்துக் கொண்டார்.

கஜபா படையணி பேரவை உறுப்பினர்கள், முன்னாள் படைவீரர்கள், சிரேஷ்ட கஜபா படையணி அதிகாரிகள், காயமடைந்த போர்வீரர்கள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முதலாவது ரஜரட்ட ரைபிள் படையலகு மற்றும் முதலாவது விஜயபாகு காலாட் படையணி வீரர்களை இணைத்து மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன அவர்கள் தலைமையில் பொதுமக்களை இலக்கு வைத்து பிரிவினைவாத பயங்கரவாதிகளின் வன்முறை மற்றும் கொடூரமான தாக்குதல்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய ஒரு காலாட்படை படைப்பிரிவின் தேவையை அடிப்படையாக கொண்டு 1983 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி கஜபா படையணி புதிய காலாட் படையணியாக ஆரம்பிக்கப்பட்டது.

கஜபா படையணியின் முதலாவது கட்டளை அதிகாரியாக லெப்டினன் கேணல் விஜய விமலரத்ன கடமையாற்றியதுடன் யானையின் பலம் மற்றும் தற்காப்புத் திறமைக்கு சவால் விடக்கூடிய உடல் வலிமை கொண்ட அரசனாக காணப்பட்ட கஜபா மன்னருக்கு மரியாதை அளிக்கும் முகமாக இப் படையணிக்கு பெயராக 'கஜபா' என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. 'ஒற்றுமையே பலம்' என்பது இதன் மகுட வாசகமாகும்.