Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th January 2024 21:21:32 Hours

ஐந்தாவது இராணுவக் கோட்பாடு பதிப்புகள் வெளியீடு

இராணுவத் தலைமையகத்தில் இராணுவக் கோட்பாடு பதிப்புகள் வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) வெளியிடப்பட்டது. இலங்கை இராணுவத்தின் நலனுக்காக இராணுவப் பயிற்சி, கல்வி மற்றும் ஊழியர்களின் பணிக்கான புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்துகிறது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் அறிவுபூர்வமான வழிகாட்டுதலின் கீழ், இந்த வெளியீடுகள் இராணுவ அறிவுக்கு மிகவும் பொருத்தமானதாகவும் அனைத்து இராணுவ வீரர்களுக்கும் அணுகக்கூடியதாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

ஐந்தாவது இராணுவக் கோட்பாடு பதிப்பு வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த பிரதம விருந்தினரான இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பீசிஎல் குணவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்கள் வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து, பிரதம அதிதிக்கு பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜி டபிள்யூ டபிள்யூ டபிள்யூ எம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ அவர்களால் திருத்தப்பட்ட கோட்பாடு வெளியீட்டின் முதல் பிரதி, இராணுவக் கள கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் உள்ளக பாதுகாப்புச் செயற்பாடுகள், போர் எதிர் புரட்சிகள், இராணுவ கலைச்சொற்கள் கையேடு, இராணுவச் சுருக்கக் கையேடு, செயற்பாட்டுப் பணிநிலை அதிகாரிகள் பணிக் கையேடு என்பன வழங்கப்பட்டன. அத்தோடு சிறப்பம்சமாக 'இராணுவப் பயிற்சிக் கட்டளையின் வரலாற்று நினைவுகள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் 2012-2023' என்ற தலைப்பில் கொபி டேபிள் புத்தகமும் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

அனைத்து வெளியீடுகளின் மின்ணியல் பதிப்புகளும் இராணுவ மின் போர்ட்டலில் பதிவேற்றப்பட்டதுடன், இது இராணுவம் முழுவதும் பணியாளர்களுக்கு பரவலான அணுகலை உறுதி செய்கிறது.