Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th January 2023 19:49:08 Hours

இலங்கை சமிக்ஞை படையணி படையினரால் புதிய நிர்மாணிக்கப்பட்ட கையடக்க டிரான்ஸ்ஸீவர் இராணுவத் தளபதிக்கு வழங்கல்

10 வது இலங்கை சமிக்ஞை படையினரால் உருவாக்கப்பட்ட புதிய ‘யுஎச்எப் பாதுகாப்பற்ற கையடக்க டிரான்ஸ்ஸீவர்’ "பிளாஷ் கொம்" என பெயர் சூட்டப்பட்டுள்ளதுடன் இராணுவ நிர்வாக விடயங்களை சுமூகமாக நடத்துவதற்கு பாதுகாப்பற்ற தகவல் தொடர்பு அமைப்புகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் திறன் கொண்ட இக் கருவியினை இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களிடம் வியாழக்கிழமை (05) இராணுவத் தலைமையகத்தில் பிரதான சமிக்ஞை அதிகாரியான மேஜர் ஜெனரல் எச்.எம்.எல்.டி ஹேரத் ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பிஎஸ்சி அவர்கள் கையளித்தார்.

இராணுவத்தினருக்கான நம்பகமான இராணுவத் தொடர்பாடல் உபகரணங்களின் இன்றைய தேவையை உணர்ந்து இராணுவத்தின் தொடர்பாடல், இணையம் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவான இலங்கை சமிக்ஞைப் படையினர், இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் பேரில் இறக்குமதி செய்யப்பட்ட பல பாகங்களைச் சேகரித்து இந்த உபகரணங்களை சேகரித்தது. தலைமை சமிக்ஞை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் உருவாக்கினர். இலங்கை சமிக்ஞை படையணி வல்லுநர்கள் இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களை தேவையான மாற்றங்களுக்குப் பிறகு, புதிய ‘யுஎச்எப்’ கையடக்க டிரான்ஸ்ஸீவர்களை வடிவமைக்க ஒப்பீட்டளவில் குறைந்த மற்றும் மலிவான செலவில் நிர்வாகத் தேவைகளுக்காக கையடக்கத் தொடர்பு சாதனங்களை நிர்மாணித்துள்ளனர்.

இத் திட்டம் லெப்டினன் கேணல் எச்எம்பீ எம் பி ஹேரத் யுஎஸ்பீ அவர்களால் கட்டளையிடப்படும் 10 வது இலங்கை சமிக்ஞை படையினரால் அவர்களது துறைசார் நிபுணர்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் இலங்கை இராணுவத்தின் நீண்ட காலத் திட்டமான சுய நிலைத்தன்மை மற்றும் தொடர்பாடல் துறையில் பாதுகாப்பு உற்பத்தியின் மற்றுமொரு விரிவாக்கமாகும்.

இராணுவத் தளபதி அவர்களினால் கையடக்க டிரான்ஸ்ஸீவரைப் பார்வையிட்டதன் பின்னர் இந்தத் திட்டத்தை யதார்த்தமாக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளைப் பாராட்டினார். இதனால் நாட்டிற்கு அதிக அளவு அந்நியச் செலாவணி சேமிக்கப்படுகிறது.