Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th October 2022 13:17:48 Hours

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் உயிர்நீத்த போர்வீரர்களுக்கு பனாகொடையில் நினைவஞ்சலி

இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் உயிர்நீத்த 3,744 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களை நினைவுபடுத்தி பனாகொடை இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் தெற்காசியாவின் மிகப்பெரிய போர்வீரர் நினைவுதூபியில் தியாகம், வீரம், அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றினை நினைவுப்படுத்தி இன்று (25) பிற்பகல் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் போர்வீரர்களின் பெற்றோர், வாழ்கை துணைவியர், பிள்ளைகள் உள்ளிட்டோருடன் இலங்கை இலேசாயுத காலாட் படையணி படைவீரர்கள், சிரேஸ்ட அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அழைப்பாளர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.

எமது தாய்நாட்டின் துணிச்சலான வீரர்கள் செலுத்திய உயர்ந்த தியாகத்திற்கு வணக்கம் செலுத்தும் இவ்வருட நினைவேந்தல், தற்போது நாம் அனைவரையும் ஒரு நிலையான சமாதானத்தை அனுபவிக்க வழிவகுத்துள்ளதோடு, படையணி படைத் தளபதியும் இராணுவத் பதவி நிலைப் பிரதானியுமான மேஜர் ஜெனரல் டீஜே கொடிதுவக்கு ஆர்டப்ளியு ஆர்எஸ்பி என்டியு அவர்களின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பிரதம அதிதியாக பங்கேற்றார்.

பிரமாண்டமான மற்றும் அற்புதமான இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் போர் வீரர்களின் நினைவு தூபியானது 2015 ஒக்டோபர் 26 ஆம் திகதி ஜெனரல் ஆர்எம்டி ரத்நாயக்க (ஓய்வு) டபிள்யுடபிள்யுவி ஆர்டபிள்யுபி ஆர்எஸ்பி விஎஸ்வி யுஎஸ்பி என்டியு பிஎஸ்சி அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டது, மேலும் இது வீரம் மற்றும் வாழ்க்கையின் கதைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் உயிர்நீத்த வீரர்களின் அர்பணிப்பு மற்றும் வீரத்தை பறைசாற்றும் ஒரு கம்பீரமான பாதுகாவலர் போன்ற சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னாள் இராணுவத் தளபதிகளான ஜெனரல் (ஓய்வு) சாந்த கோட்டேகொட மற்றும் ஜெனரல் (ஓய்வு) தயா ரத்நாயக்க ஆகியோர் 141 வது ஆண்டு நினைவு தின நிகழ்வுகளில் கலந்து கொண்டமை இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் குடும்பத்திற்கு முக்கியத்துவத்தைச் சேர்த்தது.

பல மத அனுஷ்டானங்களுக்கு பின்னர் இந் நிகழ்வில் தேசிய கீதம் இசைத்தல் , இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கீதம் இசைத்தல் என்பன இடம் பெற்றன.

நினைவுத்தூபியை சுற்றி படையினர் விழிப்புடன் நின்ற நிலையில், இராணுவத் தளபதி மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் அங்கு கூடியிருந்த அனைவரும், உயிரிழந்த இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் போர் வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

சில வினாடிகளின் பின்னர், நினைவுதூபியின் மீது அனைவரது பார்வையும் பதிந்திருந்த நிலையில், அன்றைய பிரதம அதிதியான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் மெல்லிசைக்கு மத்தியில் நினைவு தூபியை நோக்கி சென்று போர்வீரர்களுக்கு நினைவாக அஞ்சலி செலுத்தினார்.

உயிரிழந்த இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் போர்வீரர்களின் ஏராளமான மகன்கள் மற்றும் மகள்கள், பெரும்பாலும் தங்கள் தாய் அல்லது உறவினர்களுடன் சேர்ந்து, அந்த சீருடை அணிந்த துக்கத்தில் இருப்பவர்களைப் போலவே, துல்லியமான கட்டுப்பாட்டுடனும், மிகுந்த கவனத்துடனும் நடந்துகொண்டனர். இந்த அற்புதமான காட்சியை மற்ற இடங்களில் அரிதாகவே பார்க்க முடியும். இது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மாவீரர்களின் நினைவுகள் மீது தனித்துவம், பாசம் மற்றும் முழுமையான மரியாதை ஆகியவற்றினை குறிக்கும் தருணமாகும்.

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் உயிரிழந்த போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மலர்களை ஏந்தியவாறு பின்தொடர்ந்து வரிசையாக நின்று இலங்கையின் பாதுகாப்பிற்காக உயிர் தியாகம் செய்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பியுகல் இசைக்கப்பட்டு ரீவீல் ஒலித்ததும் அனைவரும் எழுந்து நின்று, அன்றைய நினைவு தினத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு முன்பதாக அந்த போர் வீரர்களின் நினைவுகளை மீண்டும் ஒருமுறை நினைவு கூர்ந்தனர்.

மே 2009 க்கு முன்னர் நாட்டிற்கு சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக யுத்தத்தின் போது அயராது பணியாற்றிய இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் 161 அதிகாரிகள் மற்றும் 3583 போர்வீரர்கள் தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக தங்கள் இன்னுயிர்களை நீத்தமை அனைத்து இலங்கையர்களாலும் போற்றப்படுகின்றது.

இந்நிகழ்வில் இராணுவ சேவா வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே மற்றும் இராணுவ சேவா வனிதா பிரிவின் உப தலைவி திருமதி ஷிரோமலா கொடித்துவக்கு ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நினைவேந்தல் நிகழ்வு நிறைவடைந்ததை தொடர்ந்து, அனைத்து அதிகாரிகளும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் அதிகாரிகள் உணவகத்திற்கு சென்றனர். பின்னர் தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தின், “அதிகாரிகளின் மெஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம்” என்ற இராணுவத்தில் உள்ள அதிகாரிகளின் உணவக பிரிவுகளின் புதிய கைதொலைபேசி மற்றும் இணையத்தள செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

இராணுவத்தின் பிரதம சமிஞ்சை அதிகாரி மேஜர் ஜெனரல் எச்எம்எல்டி ஹேரத் ஆர்எஸ்பி யுஎஸ்பி பிஎஸ்சி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் ஜிஎல்எஸ்டபிள்யு லியனகே யுஎஸ்பி பிஎஸ்சி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தின் பணிப்பாளர்களால் இந்த செயலி உருவாக்கப்பட்டது.

இந் நிகழ்வில் முன்னாள் இராணுவ வீரர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அழைப்பாளர்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.