Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th December 2023 18:47:15 Hours

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியில் ஓய்வுபெறும் தேசிய மாணவச் சிப்பாய் படையணி அதிகாரிகளுக்கு பாராட்டு

இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையகத்தில் புதன்கிழமை (டிசம்பர் 6) இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியில் ஓய்வுபெறும் நாற்பத்து நான்கு தேசிய மாணவர் சிப்பாய் படையணி அதிகாரிகளின் சேவைகளுக்கு பாராட்டு வழங்கப்பட்டது.

“ஆயத்தமின்றி இல்லாதிரு” (“Never be Unprepared) என்ற தொனிப்பொருளில் இராணுவத்தினருக்கான அவர்களின் குறிப்பிடத்தக்க சேவையைப் பாராட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் யூ.டி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரதி தளபதி எம்டிகேஆர் சில்வா கேஎஸ்பீ அவர்களால் வரவேற்கப்பட்டார்.

ஓய்வுபெற்றுசெல்லும் நாற்பத்து நான்கு தேசிய மாணவர் சிப்பாய் படையணி அதிகாரிகள் தொடர்பான சுருக்கமான விளக்கக்காட்சியுடன் அவர்களின் அர்ப்பணிப்பு சேவைகள் பாராட்டப்பட்டது. அவர்கள் அனைவரையும் கௌரவிக்கும் வகையில், அன்றைய பிரதம அதிதியான மேஜர் ஜெனரல் யு.டி.விஜேசேகர அவர்களால் நினைவுச் சின்னம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சி பணிப்பக படையினரின் நடன அம்சங்கள், நிகழ்விற்கு வண்ணத்தையும் பொழுதுபோக்கையும் சேர்த்தன.

நிறைவுரையினை தொண்டர் படையணி தளபதி ஆற்றினார். தேசிய மாணவ சிப்பாய் படையணி அதிகாரிகளின் கடமை முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் மற்றும் சமாதான காலத்திலும் போரிலும் ஆசிரியர்களாக அவர்களின் தொழில்முறை சேவையை பாராட்டினார். மேலும், தேசிய மாணவ சிப்பாய் படையணி அதிகாரிகளின் இராணுவத்தில் "மௌன பங்களிப்பாளர்களாக" தாய்நாட்டிற்கு மகத்தான சேவையை ஆற்றியுள்ளனர் என்று குறிப்பிட்ட அவர், ஓய்வுபெறும் ஒவ்வொருவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் கேணல் நலன்புரி அவர்கள் ஆற்றிய சுருக்கமான உரையில் ஓய்வின் பின்னரான நலன்புரி பலன்கள் குறித்து விளக்கினார். மருத்துவப் கொடுப்பனவுகள் மற்றும் இலங்கை இராணுவ தொண்டர் படையணி காப்புறுதிப் கொடுப்பனவு தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.

தேசிய மாணவ சிப்பாய் படையணி பணிப்பாளர், இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் சேவையாற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.