Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th February 2024 10:00:43 Hours

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி பயிற்சிப் பாடசாலைக்கு விஜயம்

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே. ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் 12 பெப்ரவரி 2024 ஆம் திகதி இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலைக்கு தனது விஜயத்தை மேற்கொண்டார்.

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி அவர்களை இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலையின் தளபதி கேணல் ஜேஎஜீ ஜயரத்தன கேஎஸ்பீ அவர்கள் வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலையின் தளபதி கேணல் ஜேஎஜீ ஜயரத்தன கேஎஸ்பீ அவர்கள் நடந்துகொண்டிருக்கும் பாடநெறி தொடர்பான விரிவான விளக்கத்தை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, நிர்வாக உதவிப் பாடநெறியின் பயிற்சியாளர்கள், வருகை தந்த இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தளபதிக்கு, பாடநெறியின் போது பெற்றுக்கொண்ட அறிவு மற்றும் பயிற்சி தொடர்பான ஆவணப்படத்தை வழங்கினர்.

பின்னர், இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலையின் தளபதி பாடநெறியில் பங்கேற்றவர்களுக்கு தேசிய தொழில் தகுதிக்கான சான்றிதழ்களை வழங்கியதுடன் படையினருக்கு உரையாற்றினார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.