Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th December 2023 20:13:11 Hours

இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகர ஓய்வு

இலங்கை இராணுவ தொண்டர் படையணிக்கும் நாட்டிற்கும் 35 வருடங்களுக்கும் மேலாக குறிப்பிடத்தக்க சேவையாற்றிய மேஜர் ஜெனரல் யு.டி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வில் மரியாதை செலுத்தப்பட்டு இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் 53 வது தளபதி நியமனத்திலிருந்து ஓய்வு பெற்றார்.

அன்றைய நிகழ்ச்சி நிரலுக்கு இணங்க, வெளிச்செல்லும் தளபதிக்கு முகாம் வளாகத்திற்கு முன்பாக பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தலைமையக முதன்மை பணிநிலை அதிகாரி, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் நிலைய தளபதி மற்றும் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் படையலகு தலைமைக கட்டளை அதிகாரி ஆகியோர் மரியாதையுடன் வரவேற்றனர்.

பின்னர், மேஜர் ஜெனரல் யு.டி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ அவர்கள் பரம வீர விபூஷண நினைவிடத்திற்கு முன்பாக மலர் கொத்து வைத்து, வீரமரணமடைந்த போர் வீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, தேசபக்தி இசையின் மேளதாளங்களுக்கு மத்தியில் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் வழங்கப்பட்ட கௌரவ மரியாதையை தொடர்ந்து இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் துசித சில்வா கேஎஸ்பீ அவர்களால் வரவேற்பு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தொண்டர் படையணியின் பெருமைமிக்க வரலாற்றில் ஒரு அழியாத அத்தியாயத்தை குறிக்கும் வகையில் விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் சிரேஷ்ட அதிகாரி தனது கையொப்பத்தை இட்டு தனது கடமைகளை ஒப்படைத்தார். பின்னர் அவரது உருவாக்கத்தில் திறந்து வைக்கப்பட்ட ஒன்று கூடல் மண்டபத்தில் இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையக பணியாளர்களுடன் குழு படம் எடுத்துக் கொண்டார்.

வெளிச்செல்லும் தளபதி படையினருக்கு ஆற்றிய உரையின் போது தனது சேவை காலப்பகுதியில் படையணியின் நோக்கங்களை அடைவதற்கு உதவிய அனைத்து இலங்கை இராணுவ தொண்டர் படையணி உறுப்பினர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். தேநீர் விருந்துபசாரத்தின் போது இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையக சிப்பாய்களின் சார்பாக படையணி சாஜென் மேஜரால் அவருக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

பிரதான வாயிலுக்குச் செல்லும் சாலையின் இருபுறமும் வரிசையாக நின்றிருந்த அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில் சிரேஷ்ட அதிகாரி தலைமையகத்திலிருந்து வெளியேறினார்.