Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th April 2018 17:58:29 Hours

இலங்கை இராணுவ தளபதி மலேசியா உயர் ஆணையாளரை சந்திப்பு

மலேசியாவிற்கு விஜயத்தை மேற் கொண்ட இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் (19) ஆம் திகதி வியாழக் கிழமை மலேசியாவின் இலங்கை உயர் ஆணையாளரான ஏ.ஜே.எம் முசும்மில் அவர்களை மலேசியா கோலலம்பூரில் சந்தித்தார்.

மலேசியா கோலலம்பூரில் நடைப் பெற்ற 16 ஆவது பாதுகாப்பு சேவை ஆசியா கண்காட்ச்சி 2018 க்கான தேசிய மாநாட்டில் இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக கலந்து கொண்டதை பற்றியும் அதன் அனுபவங்கள் பற்றியும் இருவருக்கும் மிடையில் கலந்துரையாடப்பட்டது.

இச் சந்திப்பில் மலேசியா உயர் ஆணையாளர் காரியாலயத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டதோடு இச் சந்திப்பின் நினைவாக இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களால் மலேசியா உயர் ஆணையாளருக்கு நினைவு சின்னம் வழங்கப்பட்டது.

bridgemedia | Air Jordan Release Dates 2020