Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th June 2023 14:25:43 Hours

இலங்கை இராணுவ அதிகாரிகள் மாலியில் தொடர்ந்தும் கலந்துரையாடல்

மாலி விஜயத்தின் போது, பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபீ விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் இலங்கையின் மாலி ஐ.நா அமைதி காக்கும் - பீ1 ஒருகிணைப்பு பிரிவின் தளபதி கேணல் எஸ்டபிள்யூபீஎம்எச்ஆர் சேனாதீர ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஆகிய இருவரும் செவ்வாய்கிழமை (27) மினுஸ்மா கிழக்கு பிரிவின் தளபதியான காவோ மிஷன் ஆதரவு மையத்தின் பிரிகேடியர் ஜெனரல் ஹரேந்திர பிரதகத் மற்றும் எகிப்து முகாமின் வழங்கல் தலைவர் திருமதி ஆஷா கின் ஆகியோரை சந்தித்து இலங்கையின் புதிய மாலி ஐ.நா அமைதி காக்கும் - பீ1 குழு திட்டமிட்டபடி செப்டம்பர் 2023 க்குள் அனுப்பும் பணிகள் தொடர்பாக கலந்துரையாடினர்.

தற்போது உளவுப் பயணமாக மாலியில் இருக்கும் பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபீ விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ அவர்கள் தங்கும் விடுதி வசதிகள், உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய வழங்கல் தேவைகள் தொடர்பாக ஆய்வு செய்ததுடன் பிரிகேடியர் ஜெனரல் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

அவரின் தனித்தனியான விஜயங்களின் போது, பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபீ விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ அவர்கள் மற்றும் கேணல் எஸ்டபிள்யூபீஎம்எச்ஆர் சேனாதீர ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஆகிய இருவரும் செப்டம்பரில் பொறுப்பேற்க திட்டமிடப்பட்டுள்ள மாலி ஐ.நா அமைதி காக்கும் - பீ1 குழு பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இலங்கை இராணுவ அதிகாரிகள் காவோவில் உள்ள 4வது ஐ.நா அமைதி காக்கும் தலைமையகத்திற்கும் விஜயம் செய்ததுடன் ஏற்கனவே அமைதி காக்கும் கடமைகளில் ஈடுபட்டுள்ள இலங்கை படையினருடன் சுமுகமாக உரையாடினர்.