Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th December 2017 14:06:08 Hours

இராணுவத்தினரால் வரிய குடும்பத்தில் வாழும் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 233ஆவது படைப் பிரிவினர்களுடன் இணைந்து மக்கள் வங்கியின் பௌத்த சங்கத்தினரின் உதவியுடன் வெலிகந்த மற்றும் வாகரய் பிரதேசத்தின் மல்வில மற்றும் சதுன்பிடிய> நாமல்கம போன்ற பிரதேசங்களில் குறைந்த வருமானத்தில் வாழும் பாடசாலை மாணவர்கள் 150 பேருக்கு பாடசாலை உபகரணங்களை; பகிர்ந்தளித்தனர்.

இந்த பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்விற்காக மக்கள் வங்கியின் பௌத்த சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் ,ராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

குறைந்த வருமானத்தில் வாழும் பாடசாலை மாணவர்கள் பாடசாலை உபகரணங்கள் இல்லாத காரணத்தினால் பாடசாலைக்கு செல்வதில்லை என்ற காரணத்தை அறிந்து கொண்ட 23 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 233ஆவது படைபிரிவினரின் தேடுதலின் பின்னர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.இதற்கமைவாக கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மற்றும் 233 ஆவது படைபிரிவின் அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக மக்கள் வங்கியின் பௌத்த சங்கத்தினரின் உதவியுடன் இந்த பாடசாலை உபகரணங்ளை வழங்க முன்வந்தனர்.

இந்த பாடசாலை உபகரணங்களில் அப்பியாசப் புத்தகம் மற்றும் கணித பாடதுக்கான உபகரணங்களும் விலையுயர்ந்த பாடசாலை பொருட்களும் உள்ளடங்கும்.

இந்த நிகழ்விற்கு 233 ஆவது படைபிரிவின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.

Best jordan Sneakers | Nike