Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd March 2018 13:55:47 Hours

இராணுவத்தினரால் ஒழுங்குசெய்யப்பட்ட கால்பந்துப் போட்டி

22 ஆவது படைப் பிரிவு மற்றும் 224 படைத் தலைமையகம் இணைந்து மூதூர் லீக் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிகள் மூதூர் மத்திய கல்லூரி மைதானத்தில் (15) ஆம் திகதி வியாழக் கிழமை இடம்பெற்றன. இனங்களுக்கு இடையிலான நல்லினக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வல அவர்களது வழிக்காட்டலின் கீழ் 22 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர அவர்களது தலைமையில் 224 , 224 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் பி எதிரிவீர அவர்களது ஒத்துழைப்புடன் இடம்பெற்றன.

பொதுமக்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளின் ஒருங்கினைப்புடன் பெருஞ் சன கூட்டத்துக்கு மத்தியில் இந்த கால்பந்து போட்டிகள் இடம்பெற்றன. 22 ஆவது படைப் பிரிவின் கால்பந்தணி 3- 0 எனும் ரீதியில் மூதூர் லீக் அணியை வெற்றி கொண்டது.

இந்த நிகழ்வில் பிரதான விருந்தினராக, 22 பிரிவு பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருணா ஜயசேகர அவர்கள் வருகை தந்து வெற்றியாளர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த போட்டியின் இடைவெளியின் போது 15 ஆவது இலேசாயுத காலாட் படையணியினது கண்டி நடன நிகழ்வு மைதானத்தின் மத்தியில் இடம்பெற்றன.

இந்த இறுதிப் போட்டி நிகழ்வில் திருகோணமலையின் தர்மகீர்த்தி தேரர், சம்பூர் காலிகோயில் சிவசிறி கிருஸ்னசாமி, அருட் தந்தை சுதர்ஷன் கோமஷ் , மூதூர் மௌவி தஷ்ரிக் ஹஷ்ரத், தோப்பூர் மௌவி ஆமன் ஹஷரத், முல்லிப்பொத்தானை மௌவி என். எம் சபீக், 222 ஆவது படைத் தளபதி பிரிகேடியர் தீபால் புசல்ல, 224 ஆவது கட்டளை தளபதி கேர்ணல் பி எதிரிவீர, மூதூர் பிரதேச செயலாளர். ஏ எம் தாகீர் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீர்ர்கள் கலந்து கொண்டனர்.

Nike air jordan Sneakers | Nike Running