Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th July 2023 12:46:00 Hours

இராணுவத் தளபதியின் வழிகாட்டலில் மாத்தளை விஜய கல்லூரியில் விளையாட்டு மைதானம் படையினரால் புனரமைப்பு

சில தசாப்தங்களுக்கு முன்னர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூ ஆர்எஸ்பீ என்டியு அவர்களால் புத்துயிர் பெறப்பட்டு புத்துணர்ச்சியூட்டப்பட்ட அவரது கல்லூரி கால நினைவுகளுடன் புதன் கிழமை (19) மாத்தளை விஜய கல்லூரியின் விளையாட்டு மைதானத்தின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைக்குமாறு அழைக்கப்பட்டார்.

விஜய கல்லூரி அதிபர் திரு. ரஜித தீக்ஷன அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பாடசாலை விளையாட்டு மைதானம் தரமற்ற நிலையில் காணப்பட்டமையால், பாடசாலை விளையாட்டு மைதானத்தை புனரமைக்க தொழில்நுட்ப மற்றும் பொறியியல் திறன்களையும் மனிதவளத்தையும் வழங்க இராணுவத் தளபதி முன்வந்தார். அதன்படி, இலங்கை இராணுவத்தின் பிரதான களப் பொறியியல் படையணியின் பணிகளில் திறமையான 6 வது இலங்கை பொறியியல் படையணியின் படையினர் இப்பணியை முன்னெடுத்தனர்.

கல்லூரியின் மேற்கத்திய வாத்தியக் குழுவினர் அன்றைய பிரதம அதிதியான பழைய சிரேஷ்ட மாணவர் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை வளாகத்திற்கு வரவேற்றதுடன், அவருக்கு மரியாதையும் செலுத்தினர். அதிபர் திரு.ரஜிததீக்ஷன, ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள் பிரதம அதிதியையும் அவரது துணைவியரான இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களையும் மரியாதையுடன் வரவேற்றனர்.

சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பாடசாலை விளையாட்டு மைதானத்திற்கு வருகை தந்ததை தொடர்ந்து, அன்றைய பிரதம விருந்தினர் 'மகா சங்கத்தினரின்' மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் கல்வித் திணைக்கள அதிகாரிகளுடன் விளையாட்டு மைதான சீரமைப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இராணுவத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிபர் மற்றும் பல ஆசிரியர்களுடன் கல்லூரி வளாகத்தைச் சுற்றிப் பார்வையிடும் போது அவர்களுடன் சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே தனது பாடசாலைப் படிப்பின் போது மாணவர் படையணி உறுப்பினராகவும், கல்லூரி சாரணர் குழுவில் உறுப்பினராகவும் இருந்தது மட்டுமல்லாமல் மாணவத் தலைவராகவும் செயல்பட்டார்.

பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபீ விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ டபிள்யூ எச் ஆர் ஆர் வி எம் என் டி கே பி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ, பிரதம களப் பொறியியளார் பிரதானி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், பாடசாலை ஊழியர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.