Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th December 2023 11:04:50 Hours

இராணுவ வழங்கல் பாடசாலையில் பணிநிலை பாடநெறியில் பட்டம் பெற்ற மத்திய தர 35 அதிகாரிகள்

இராணுவம் (32) விமானப்படை (02), நேபாளம் (01) அடங்கலாக 35 மத்திய தர அதிகாரிகள் திருகோணமலை இராணுவ வளங்கல் பாடசாலையில் ஒரு வருட இராணுவ வளங்கல் பாடநெறி - இல 9 இனை நிறைவு செய்ததன் முகமாக புதன்கிழமை (13) கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது பட்டம் பெற்றனர்.

இராணுவ வழங்கல் பாடசாலை தளபதியின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இராணுவ வழங்கல் பாடநெறி இலங்கை இராணுவத்தின் வழங்கல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, முப்படையினரின் தொழில் மற்றும் வழக்கமான நடைமுறைகளை நடத்துவது தொடர்பான, வளங்கல் மற்றும் நிர்வாகத் துறைகளில் உயர் தொழில்முறைப் பாடமாக அமைந்துள்ளது. இராணுவ வழங்கல் பாடநெறியானது ஒரு வருட காலத்திற்கு முழு நேர பாடநெறியாக நடத்தப்படுகிறது.

பிரதம அதிதியை இராணுவ வழங்கல் பாடசாலை தளபதி வரவேற்றதை தொடர்ந்து புதன்கிழமை நிகழ்வு ஆரம்பமானது. பின்னர், 35 பட்டதாரிகளுக்கும் சான்றிதழ்கள் அடங்கிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரவாரங்களுக்கு மத்தியில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வின் மற்றுமொரு சிறப்பு அம்சம் இரண்டு மதிப்புமிக்க இராணுவ வழங்கல் பாடநெறிக்கு விருதுகளை வழங்குவதாகும். ‘சிறந்த வழங்கல் திட்டமிடளாலர்’ விருது பொறியியல் சேவைப் படையணியைச் சேர்ந்த மேஜர் மேஜர் ஜேசீ ருவன்பத்திரன அவர்களுக்கும், பாடநெறி - இல 9 இல் சிறந்த செயல்திறன் விருதும் இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் ஆர்சீஎன்பி ரன்கொத்கெதர அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பட்டதாரிகளுக்கு ஆற்றிய உரையில் வழங்கல் தொடர்பான தொழில்முறை பாடநெறிகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும் எந்தவொரு நிறுவனத்தையும் மேம்படுத்துவதற்கான அவற்றின் பயன்பாட்டை சுட்டிக் காட்டினார். அத்துடன் இப் பாடநெறியில் வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

பின்னர், நிகழ்ச்சி நிரலில் மேலும் ஒரு சம்பிரதாயமாகவும் அதிகாரப்பூர்வமாகவும் பாடசாலையில் ‘கோல்டன் லாக் 2023’ வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி உட்பட அதிதிகளிடம் முதல் சில பிரதிகள் கையளிக்கப்பட்டன. அன்றைய நிகழ்வுகளின் நிறைவில், இராணுவ வழங்கல் தளபதி அன்றைய பிரதம அதிதிக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கினார்.

பட்டமளிப்பு விழாவில் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் யூ.டி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ மற்றும் இராணுவ வழங்கல் கட்டளையின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீ எல்எஸ்சீ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள், அறிஞர்கள் மற்றும் சில அழைப்பார்கள் கலந்துகொண்டனர்.

இந்த பாடநெறியானது இலங்கை இராணுவத்தின் தெரிவு செய்யப்பட்ட மாணவ அதிகாரிகளின் திறன்கள் மற்றும் மனோபாவங்களை விருத்தி செய்வதற்கும், அந்த அதிகாரிகள் இராணுவத்திலோ அல்லது அந்தந்த நிறுவனங்களிலோ சிரேஷ்ட வழங்கல் நியமனம் பெற்றவர்களாக நியமிக்கப்படுவதற்கு முன்னர், சகோதர சேவைகள் மற்றும் நட்புறவான வெளிநாட்டு நாடுகளுக்கும் இப்பாடநெறியை விரிவுபடுத்துவதாகும்.

இந்த பாடநெறி ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதுடன், இது வழங்கல் முதுகலை (எல்எம் , எம்பீஏ) பட்டத்தினை வழங்குகிறது. இதனை தவிர, தகுதி பெற்றவர்கள் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு விரிவான ஆங்கில மொழி பாடநெறிக்கு உட்படுகிறார்கள்.