Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th October 2022 15:32:01 Hours

இராணுவ வழங்கல் கட்டளைத் தலைமையகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய அலுவலகக் கட்டிடம்

கொஸ்கம இராணுவ வழங்கல் கட்டளைத் தலைமையகத்தில் புதிய அலுவலக கட்டிடம் வெள்ளிக்கிழமை (07) திறந்து வைக்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இராணுவ வழங்கல் கட்டளைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பிஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சி எல்எஸ்சீ அவர்கள் தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதியை அன்புடன் வரவேற்ற பின்னர் தலைமையகத்தின் நுழைவாயிலில் இராணுவ பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை தளபதிக்கு வழங்கப்பட்டது.

அதன் பின்னர், மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சி எல்எஸ்சீ அவர்கள் இராணுவத் தளபதியின் வருகையை நினைவு கூறும் வகையில் புதிய அலுவலக வளாகத்திற்கு முன்பாக மரக்கன்று ஒன்றை நாட்டி வைக்க தளபதி அழைக்கப்பட்டார்.

தொடர்ந்து சுபமுகூர்த்தில் புதிய அலுவலக வளாகத்தை திறந்து வைத்த பின்னர், பிரித் பராயணங்களுக்கு மத்தியில் புதிய கட்டிடத்தின் நாடவை இராணுவத் தளபதியின் கைகளினால் வெட்டப்பட்டு பாரம்பரிய மங்கள விளக்கு ஏற்றப்பட்டவை தொடர்ந்து சமய வழிபாடுகளில் கலந்து கொண்ட இராணுவத் தளபதி, இந்நிகழ்வுக்கு வந்த பௌத்த பிக்குகளுடன் கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டார்.

அதனை தொடர்ந்து இராணுவ வழங்கல் கட்டளைத் தலைமையகத்தின் தளபதி உட்பட ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் குழு இராணுவத் தளபதியுடன் இணைந்து முகாம் வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கவர்ச்சிகரமான கட்டிடத்தின் நிர்மாண பணிகளை பார்வையிட சென்றனர். அங்கு, இராணுவ வழங்கல் கட்டளைத் தலைமையகத்தின் தளபதி உட்பட சகலரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியுள்ளமை, குறித்த காலத்திற்குள் இந்த நிர்மாணப் பணிகளை நிறைவு செய்தமை என்பவற்றிக்காக இராணுவத் தளபதி பாராட்டினார்.

இந்த வைபவத்தின் முடிவைக் குறிக்கும் வகையில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் இராணுவ வழங்கல் கட்டளைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீ எல்எஸ்சீ அவர்களுக்கிடையில் நினைவு பரிசுகளும் பரிமாறப்பட்டன. இராணுவ வழங்கல் கட்டளைத் தலைமையக வளாகத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்னர், இராணுவத் தளபதி சிறப்புப் பார்வையாளர்கள் நினைவுக் குறிப்பில் அவரது கருத்துக்கள் மற்றும் பாராட்டுக்களைக் பதிவிட்டார். அதன்பின் தலைமையகத்தின் அனைத்து அதிகாரிகளுடன் குழு படம் எடுக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத் யாப்பா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியு, நிதி முகாமைத்துவ பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் டப்ளியூபீ எஸ்எம் அபேசேகர ஆர்எஸ்பி யுஎஸ்பி மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இணைந்து கொண்டனர்.