Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th January 2018 16:10:07 Hours

இராணுவ முயற்சிகளில்200 தாவர மூலிகைகள் நடுகை

200 க்கும் அதிகமான பழமை வாய்ந்த மூலிகை மரங்களை பாதுகாப்பதன் நிமித்தம் இராணுவ உதவியை நாடி அனுராதபுர ஆயுர்வேத மருத்துவரான வைத்தியகலாநிதிடொக்டர் எஸ்.எஸ். குணவர்தன அவர்களினால் இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்களுக்கு விடுத்தவேண்டுகோளுக்கமைய இராணுவத்திரின் ஒத்துழைப்புடன் அநுராதபுர ஓயமடுவ பிரதேசத்தில் இந்த மூலிகை மரங்கள் நடப்படும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த மர நடுகைகளுக்கு வவுனியா இராணுவ மெனிக் பண்ணையிலுள்ள பிரசித்தி பெற்ற விவசாய நிபுணர்கள் வருகை தந்து இராணுவ விவசாய கால்நடை பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் புவேனக குணரத்ன அவரது மேற்பார்வையில் இந்த மூலிகைகள் சிறந்ந முறையில் நடுகைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ‘ஹரிதா கமண’ எனும் தொனிப்பொருளின் கீழ்‘வனரூப’கருத்திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் அமைச்சின் ஆலோசனைக்கமைய மூலிகைத் தாவரங்களான சுது ஹதுன், ரத்ஹதுன், பெலி, பெரலிய, மருந்து அனோதா, திப்பிலி, கிகிரிந்த,தொடம்பன, கன்சூரிய, மஹாகின்ன போன்ற தாவரங்கள் நடப்பட்டு பராமரிக்கும் பணிகள் ஆரம்பமானது. இவைகள் ஆயுர்வேத்த்திற்கு பயண்படுத்தபடும் சிறந்த மூலிகைகளாகும்

அநுராதபுரத்தில் உள்ள21 ஆவது படைப்பிரிவினர்களின் ஒத்துழைப்புடன்(5) ஆம் திகதி வெள்ளிக்கிழமை டொக்டர் குணவர்த்தன அவர்களுக்கு சொந்தமான2 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மூலிகை தாவரங்கள் பயிரிடப்பட்டன.

இந்த நிகழ்விற்கு வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ருவன் டி சில்வா, பௌத்த மத விகாராதிபதியான மீபாவல்ல சிரிசுமனதேரர அவர்கள் மற்றும் டொக்டர் எஸ் எஸ் குணவர்தன அவர்கள் கலந்து கொண்டனர்.

Nike air jordan Sneakers | 『アディダス』に分類された記事一覧