Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th November 2022 20:21:45 Hours

இராணுவ மருத்துவ படையணியில் புதிய அதிகாரிகள் உணவகம் திறந்து வைப்பு

வேரஹெர இலங்கை இராணுவ மருத்துவப் படையணி தலைமையகத்தின் புதிய அதிகாரிகள் உணவக கட்டிடத் தொகுதி இன்று (9) காலை சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டு, இலங்கை இராணுவ மருத்துவப் படையணி அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பாதுகாப்பு செயளாலர் ஜெனரல் ஜிடிஎஸ் கமல் குணரத்ன (ஓய்வு) டபிள்யுடபிள்யுவி ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி எம்பில் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் அவர்களுடன் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அனைத்து வசதிகளையும் கொண்ட இந்த புதிய இரண்டு மாடி கட்டிடம் இலங்கை இராணுவ மருத்துவப் படையணி தலைமையக அதிகாரிகளின் நீண்டகால தேவை பூர்த்தி செய்யப்படுகின்றது.

பிரதம அதிதியின் வருகையுடன் நிகழ்வுகள் ஆரம்பமானதுடன் சம்பிரதாய முறைப்படி வாகன தொடர் அணிக்கு பிரதான நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் பி.ஏ.சி. பெர்னாண்டோ, மற்றும் இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் படைத்தளபதி பிரிகேடியர் டி.எம். ஹெட்டியாராச்சி ஆகியோர் அதிதிகளை அன்புடன் வரவேற்றதுடன் திறப்பு நிகழ்விற்கான சுபநேரத்திற்கு முன் அவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து பிரதம அதிதி சம்பிரதாய முறைப்படி பதாதையை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சுப நேரத்தில் புதிய அதிகாரிகள் உணவகத்ததை பாதுகாப்பு செயலாளர் அவர்கள் நாடா வெட்டி திறந்து வைத்தார். அன்றைய பிரதம அதிதி, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவத் தளபதியுடன் இணைந்து உள்ளே சென்று விசாலமான வளாகத்தை சுற்றி பார்த்தார். பின்னர் இராணுவ மருத்துவப் படையணியின் படைத்தளபதியினால் பிரதம அதிதிக்கு பாராட்டு மற்றும் நன்றியுணர்வின் அடையாளமாக நினைவுச் சின்னம் வழங்கப்பட்டதுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிஜே கொடிதுவக்கு ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியு, பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியு, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத் யாப்பா ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியு, மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.