Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th December 2023 19:39:04 Hours

இராணுவ பொலிஸ் படையணியினால் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவருக்கு பாராட்டு

அண்மையில் சீனாவில் நடைபெற்ற ஆசிய பரா விளையாட்டுப் போட்டி 2023 இல் வெள்ளி பதக்கம் வென்ற 5 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி II கேஏஎஸ் துலான் அவர்களுக்கு பொல்ஹெங்கொடவில் உள்ள இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் பாராட்டப்பட்டது.

இலங்கை இராணுவ பொலிஸ் படையணி படையினர் அதிகாரவாணையற்ற அதிகாரி II கேஏஎஸ் துலான் மற்றும் அவரது பயிற்றுவிப்பாளர் ஆகியோரை நுழைவாயிலில் அன்புடன் வரவேற்றனர். இலங்கை இராணுவத்தின் ஒழுக்கப் பணிப்பகத்தின் பணிப்பாளரும் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.சி.ஏ டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி அவர்கள் மற்றும் படையணியின் படையினர் இச்சிறப்பு நிகழ்வின் போது விளையாட்டு வீரரின் தொடர் வெற்றிகளுக்கு தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் வழங்கினர்.

இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையக நிலைய தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.