Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th November 2017 12:03:25 Hours

இராணுவ பரா விளையாட்டு போட்டிகள் ஆரம்பம்

நாட்டில் 30 தசாப்த காலங்களாக நடைபெற்ற கொடிய யுத்தத்தின்போது நாட்டுக்காக அவயங்களை இழந்த அங்கவீனமுற்ற படைவீரர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட 2017 ஆம் ஆண்டிற்கான 20 ஆவது இராணுவ பரா ஒலிம்பிக் போட்டியாகும்.

இப்போட்டியானது இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக அவர்களது பங்களிப்புடன் (22) ஆம் திகதி இன்றைய தினம் ஹோமாகம தியகம் மைதானத்தில் ஒலிம்பிக் தீபம் ஏற்றி தேசிய கீதத்துடன் ஆரம்பமானது.

இன்றைய தின ஆரம்ப நிகழ்விற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்தார்.

இராணுவ தளபதியை இராணுவ பரா சங்கத்தின் தலைவர் மற்றும் இராணுவ பிரதி பதவிநிலை பிரதானி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து அவர்கள் வரவேற்றார்.

இப்போட்டியில் இலங்கை இராணுவத்தின் 13 படையணிகள் பங்கேற்றுக் கொள்வதுடன் , 450 படை வீரர்கள் 50 விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வர். மேலும் சர்வதேச போட்டியில் கலந்து கொண்ட 100மேற்பட்ட அங்கவீனமுற்ற படை வீரர்களும் இந்த இராணுவ பரா போட்டியில் கலந்து கொள்வர்.

இப்போட்டியானது 2010 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் அறிமுகமாக்கப்பட்டது.

இப்போட்டி வெள்ளிக் கிழமை (24) ஆம் திகதி முடிவடையூம். இறுதி நிகழ்வான 24 ஆம் திகதி 200 பதக்கங்கள் வெற்றியீட்டிய படையினருக்கு பரிசளிப்பு நிகழ்வூம் இடம்பெறும்.

இந்நிகழ்வின் வாழ்த்து உறைகள் இராணுவ பரா ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து அவர்களினால் ஆற்றப்படும்.

bridgemedia | Womens Shoes Footwear & Shoes Online