Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st July 2023 12:15:39 Hours

இராணுவ பதவி நிலை பிரதானி கடமைகளைப் பொறுப்பேற்பு

இலங்கை பீரங்கிப் படையணியின் மேஜர் ஜெனரல் டபிள்யுஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் வியாழக்கிழமை (20) பதவி நிலை பிரதானியாக இராணுவத் தலைமையகத்தில் உள்ள தனது புதிய அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.

'மகா சங்க' உறுப்பினர்களின் 'செத்பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில் மேஜர் ஜெனரல் டபிள்யுஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் தனது அலுவலகத்தில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதுடன், பதவி நிலைப்பிரதானி பிக்குகளுடன் உரையாடியதிடன் ‘தானம்’ வழங்கினார்.

முன்னாள் இராணுவத் தளபதிகளில் ஒருவரான லெப்டினன் ஜெனரல் ஹெமில்டன் வனசிங்க (ஓய்வு) விஎஸ்வி யுஎஸ்பீ என்டிசி அவர்களின் மூத்த மகனாக இந்த உயர் பதவியை ஏற்றுக்கொண்டு அவர் வரலாற்றில் இணைகிறார். இந்த புதிய நியமனத்திற்கு முன்னர், மேஜர் ஜெனரல் டபிள்யுஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் இராணுவத்தின் பிரதி பதவி நிலைப் பிரதானியாக பணியாற்றினார்.

இந்நிகழ்வில் பிரதி பதவி நிலைப் பிரதானி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பணிநிலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்களின் விவரம் பின்வருமாறு; 1968 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி பிறந்த இவர் கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய மாணவர் ஆவதுடன, பாடசாலை கற்றலின் போது, படிப்பிலும் தடகளத்திலும் சிறந்து விளங்கினார்.

1987 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி பயிலிளவல் அதிகாரிகள் பாடநெறி 27 ஊடாக இலங்கை இராணுவத்தில் இணைந்தார். தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர் இரண்டாம் லெப்டினன்ட் நிலையில் 1988 டிசம்பர் 10 இல் இலங்கை இராணுவ பீரங்கி படையணியில் நியமிக்கப்பட்டார். 1988 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் திகதி 4வது இலங்கை பீரங்கி படையணியின் குழு கட்டலையாலராக கடமையாற்றினார்.

இலங்கை இராணுவ வரலாற்றில் மிகவும் அரிதான நிகழ்வுகளில் ஒன்றான மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் ஒருவரே தனது தந்தையான லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஹெமில்டன் வனசிங்க வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களிடமிருந்து அதிகா வாளை பெற்றவர்.

அவரது இராணுவ வாழ்க்கை முழுவதும், அவர் கட்டளை, பணிநிலை மற்றும் பயிற்றுவிப்பு நியமனங்களில் பணியாற்றியுள்ளார், இது இலங்கை இராணுவத்தில் அந்தந்த நியமனங்களில் அவரது அசாதாரண திறன்களை எடுத்துக்காட்டுகிறது. மே 2009 க்கு முன்னர் 22 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் மனிதாபிமான நடவடிக்கையின் போது அவர் போர் கடமைகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.

இவர் 4 வது இலங்கை பீரங்கி படையணியின் குழு கட்டலையாளராகவும், குறிபார்த்து சுடும் திறன் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் நிறைவேற்று அதிகாரியாகவும், 26 வது பிரிகேடின் பண்நிலை அதிகாரி 3 (செயல்பாடுகள்) மற்றும் பிரிகேட் மேஜராகவும், தெடர்பாடல் பிரிவின் அதிகாரி கட்டளையாகவும், இராணுவ மருத்துவ சேவை பணிப்பகத்தின் பதவி நிலை அதிகாரி 2 (நிர்வாகம்), 14 வது இலங்கை பீரங்கி படையணியின் 2 ம் கட்டளை அதிகாரி, 21 வது காலாட் படைப்பிரிவின் பணிநிலை அதிகாரி 1 (ஒருங்கிணைப்பு), குறிபார்த்து சுடல் திறன் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரி, 59 வது காலாட் படைப்பிரிவின் கேணல் பொதுப்பணி, 682 வது காலாட் பிரிகேட் தளபதி, 144 வது காலாட் பிரிகேட் தளபதி, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் (நிர்வாகம்), இராணுவ தலைமையக வெளிநாட்டு செயல்பாடுகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம், 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, இலங்கை இராணுவத்தின் பொது பணி பணிப்பாளர் நாயகம், முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதி, இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தளபதி மற்றும் இராணுவப் பதவி நிலை பிரதானியாக பதவி ஏற்கும் முன்னர் பிரதிப் பதவி நிலை பிரதானியாகவும் கடமையாற்றியுள்ளார்.

மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் பல பாடநெறிகளை பின்பற்றியுள்ளார். அவை அடிப்படை குறிபார்த்து சுடும் பாடநெறி, படையலகு பயிற்றுவிப்பாளர் பாடநெறி, நீண்ட தூர ஸ்னைப்பர் பாடநெறி, ஐக்கிய இராச்சிய சாண்ட்ஹர்ஸ்ட் இராணுவ பயிற்சி (1989), பாக்கிஸ்தானில் பீரங்கி இளங்கலை பாடநெறி (1991), இந்தியாவில் அதிகாரிகள் உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறி (1995), பாகிஸ்தானில் பீரங்கி தெழிலான்மை பாடநெறி (2006), பங்களதேசத்தில் துப்பாக்கி சுட்டு பயிற்சிப் பாடநெறி (2008), சீனாவில் பீரங்கி படையலகு கட்டளை பாடநெறி (2011), துருக்கியில் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஆயுத மோதல் குறைப்பு மற்றும் சீனாவில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறி (2018) போன்றவற்றையும் பின்பற்றியுள்ளார்.அவர் சீனாவில் உள்ள பெய்ஜிங்கின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் ஆவார், அங்கு அவர் மூலோபாய இராணுவ ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

போர்க்களங்களில் அவரது வீரம் மற்றும் துணிச்சலுக்காக, அவருக்கு ‘ரண சூர பதக்கம்’ விருது வழங்கப்பட்டுள்ளது. அவரது களங்கமற்ற சேவைக்காக விசிஷ்ட சேவா விபூஷணயா மற்றும் உத்தம சேவா பதக்கம் ஆகிய விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டது. அவர் கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், வடக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், பூர்ண பூமி பதக்கம், வடக்கு மற்றும் கிழக்கு நடவடிக்கை பதக்கம், மற்றும் ரிவிரேச சேவை பதக்கம் ஆகியவற்றையும், 1998 இல் 50 வது சுதந்திர ஆண்டு பதக்கம், 1999 இல் இலங்கை இராணுவத்தின் 50 வது ஆண்டு பதக்கம், 2023 இல் 75 வது சுதந்திர தின பதக்கம், இலங்கை ஆயுத சேவைகள் நீண்ட சேவை பதக்கம், சேவாபிமானி பதக்கம் மற்றும் அவரது சேவைப் பதக்கம் ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் திருமதி சாமா வனசிங்கவை மணந்து ஒரு மகனைப் பெற்றுள்ளார்.