Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th April 2024 20:02:46 Hours

இராணுவ படையணிகளுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டி பனாகொடையில் நிறைவு

17 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 19 அணிகளை கொண்ட 113 வீர வீராங்கனைகள் பங்குபற்றிய இராணுவ குத்துச்சண்டை போட்டி 07 ஏப்ரல் 2024 முதல் 10 ஏப்ரல் 2024 வரை பனாகொடை இராணுவ உடற்பயிற்சி வளாகத்தில் நடைபெற்றது.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதியும் இராணுவ குத்துச்சண்டை குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் எம்.கே.யூ. பீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி ஐஜி அவர்களின் வழிகாட்டலின் கீழ் இராணுவ குத்துச்சண்டை குழுவினால் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆடவர் பிரிவில், இலங்கை கவச வாகனப் படையணி 03 தங்கம், 02 வெள்ளி, 03 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று சம்பியனாகியதுடன், கஜபா படையணி 03 தங்கம், 01 வெள்ளி, 05 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. விஜயபாகு காலாட் படையணி 02 தங்கம், 03 வெள்ளி மற்றும் 03 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

பெண்கள் பிரிவில், இலங்கை இராணுவ சேவைப் படையணி 05 தங்கப் பதக்கங்களுடன் சம்பியன்ஷிப்பை உறுதி செய்ததுடன், இலங்கை பொறியியல் படையணி 02 தங்கம், 03 வெள்ளி மற்றும் 02 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

போர் கருவி பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.கே. ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பரிசளிப்புவிழாவை சிறப்பித்தார். விறுவிறுப்பான இப்போட்டியை சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் என பலர் கண்டுகளித்தனர்.