Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd November 2022 20:51:31 Hours

இராணுவ படையணிகளுக்கிடையிலான நீச்சல் மற்றும் நீர் போலோ சம்பியன்ஷிப் போட்டிகள்

இராணுவத்தினருக்கு இடையிலான நீச்சல் மற்றும் நீர் போலோ சம்பியன்ஷிப் - 2022 இன் இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் வியாழன் (1) பனாகொட இராணுவ நீச்சல் வளாகத்தில் ஆரம்பமானது.

பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவப் பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்கள் இறுதிப் போட்டிகளை பார்வையிட்டார்.

இரண்டு நாள் நீச்சல் போட்டியில் புதியவர்கள் மற்றும் திறந்த பிரிவுகளின் கீழ் 16 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இராணுவத்தின் 287 ஆண் மற்றும் பெண் நீச்சல் வீர, வீரங்கனைகள் போட்டியிட்டனர்.

இதேவேளை, படையணிகளுக்கிடையேயான நீர் போலோ போட்டியானது பனாகொட இராணுவ நீச்சல் வளாகத்தில் இடம்பெற்றதுடன், 14 படையணிகள் திறந்த மற்றும் புதியவர்கள் பிரிவுகளின் கீழ் போட்டியிட்டன.

இறுதிப் போட்டியின் நிறைவில், இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்கள் வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன், சாதனையாளர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார், இராணுவ பிரதி பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா, மேற்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல, மற்றும் நிதி முகாமைத்துவப் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

படையணி மட்டத்தில் செப்டெம்பர் மாதம் ஆரம்பமான இறுதிப் போட்டிகளையும் நடத்துவதற்கு விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியும், பொதுப்பணி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் நிஷாந்த மனேகே அவர்களின் தலைமையில் இராணுவ நீர் விளையாட்டு குழு அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டது.

இறுதிப் போட்டிகளையும் பரிசளிப்பு விழாவையும் பல சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பார்வையிட்டனர்.

இறுதி முடிவுகள் பின்வருமாறு:

1. திறந்த பிரிவு - நீர் போலோ

அ. சம்பியன் - இலங்கை இராணுவ பொலிஸ் படையணி

ஆ. இரண்டாம் இடம் - இலங்கை பொறியாளர் படையணி

2. புதியவர்கள் பிரிவு - நீர் போலோ

அ. சம்பியன் - இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியியல் படையணி

ஆ. இரண்டாம் இடம் - இலங்கை இராணுவ பொலிஸ் படையணி

3. சிறந்த வீரர் (நீர் போலோ) – லெப்டினன் எச்டிஏ பாரிஸ் (கஜபா படையணி)

4. திறந்த பிரிவு (ஆண்கள்) - நீச்சல்

அ. சம்பியன் - இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியாளர் படையணி

ஆ. இரண்டாம் இடம் - கஜபா படையணி

இ. சிறந்த வீரர் - லெப்டினன் எச்டிஏ பாரிஸ் (கஜபா படையணி)

5. புதியவர்கள் பிரிவு (ஆண்கள்) - நீச்சல்

அ. சம்பியன் - விஜயபாகு காலாட் படையணி

ஆ. இரண்டாம் இடம் - கஜபா படையணி

இ. சிறந்த வீராங்கனை - சிப்பாய் கேஏடிகே கோகில (கெமுனு ஹேவா படையணி)

6. திறந்த பிரிவு (பெண்கள்) - நீச்சல்

அ. சம்பியன் – முதலாவது இலங்கை இராணுவ மகளிர் படையணி

ஆ. இரண்டாம் இடம் - இலங்கை சமிக்ஞை படையணி

இ. சிறந்த வீரர் – சிப்பாய் என்எம்ஆர்ஜிபி நாவல (இலங்கை சமிஞ்சை படையணி)

7. புதியவர்கள் பிரிவு (பெண்கள்) - நீச்சல்

அ. சம்பியன் – முதலாவது இலங்கை இராணுவ மகளிர் படையணி

ஆ. இரண்டாம் இடம் – 5 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி

இ. சிறந்த வீராங்கனை – சிப்பாய் ஆர்எம்எம்ஜிஎஸ்எம் பண்டார 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி)