Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st March 2023 09:13:21 Hours

இராணுவ தளபதியின் தனது முதல் விஜயத்தின் போது கிழக்கு படையினர்களை சந்திப்பு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் வியாழன் காலை (மார்ச் 30) கிழக்கு பகுதியில் சேவையாற்றும் படையினரைச் சந்திப்பதற்காக கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.கே ஹெட்டியாராச்சி ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியுபீஎஸ்சி அவர்களின் அழைப்பின் பேரில் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

கஜபா படையணி படையினரால் வழங்கப்பட்ட பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதைக்கு முன்னர் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக நுழைவாயிலில் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.கே ஹெட்டியாராச்சி ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியுபீஎஸ்சி அவர்கள் தளபதியை அன்புடன் வரவேற்றார்.

தொடர்ந்து சம்பிரதாய விஜயத்தின் போது அனைத்து படைப்பிரிவுகள், பிரிகேட்கள் மற்றும் படையலகுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் படையினரிடம் தளபதி ஆற்றிய உரையில் அங்கு கடினமான காலங்களில் தொழிலின் கண்ணியத்தையும் அவர்களின் ஒழுக்கத்தையும் பேணுவதன் முக்கியத்துவத்தை எடுத்து காட்டியதுடன் அனைத்து இனங்களைச் சேர்ந்த உள்நாட்டு சிவில் மக்களுடன் நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கத்தின் மூலம் தங்கள் கடமைகளை திறம்பட நடத்தியதற்காக படையினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தளபதியின் உரையினை இறுதியில் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியினால் இராணுவத் தளபதிக்கு விசேட நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

அன்றைய தினத்தின் நினைவாக இராணுவ தளபதி அதிகாரிகள் மற்றும் படையினர்களுடன் குழு படங்களை எடுத்துக்கொள்வதற்கு முன்னர் வளாகத்தில் மரக்கன்றுகளை நடுவதற்கு அழைக்கப்பட்டார். தொடர்ந்து சிப்பாய்களின் உணவகத்தில் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட தளபதி அனைத்து படையினரிடமும் தமது எண்ணங்களை பகிர்ந்துகொண்டார்.