Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th February 2019 18:15:40 Hours

இராணுவ தளபதி ஆனந்த கல்லூரிக்கு அழைப்பு

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் கொழும்பு ஆனந்த கல்லூரியில் பழைய மாணவர் ஆவார். இவர் இந்தக் கல்லூரியின் அதிபர் அவர்களின் வேண்டுக் கோளிற்கமைய (15) ஆம் திகதி காலை இக் கல்லூரி மாணவர்களுக்கு தலைமைத்துவம் மற்றும் இலக்குகளை எப்படி அடைவது தொடர்பான விரிவுரைகளை வழங்குவதற்காக வருகை தந்தார்.

இந்த கல்லூரிக்கு வருகை தந்த இராணுவ தளபதி அவர்களை இந்த கல்லூரியின் அதிபர் அவர்கள் வரவேற்றார். பின்னர் 5 மகா சங்க தேரர்களால் பௌத்த மத ஆசிர்வாத பூஜைகள் இடம்பெற்றன. அதன் பின்னர் கல்;லூரியின் கெடட் மற்றும் சாரணர்களால் கல்லூரி வளாகத்தில் வரவேற்பு மரியாதை வழங்கப்பட்டு பி.டி. எஸ். குலரத்ன கேட்போர் கூடத்திற்கு இராணுவ தளபதி அழைத்துச் செல்லப்பட்டார்.

நிகழ்வில் முதல் அம்சமாக கல்லூரி அதிபர் அவர்களால் வரவேற்புரை வழங்கப்பட்டதை தொடர்ந்து கல்லூரியில் உள்ள ஊடகப் பிரிவு மாணவர்களால் அறிமுகக் குறிப்புகள்; முன்வைக்கப்பட்டு பின்னர் விரிவுரைகளை வழங்க இராணுவ தளபதி அழைக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து இராணுவ தளபதி அவர்கள் கல்லூரியில் தனது பழமையான நாட்களை நினைவு கூர்ந்து ' தலைமைத்துவம் மற்றும் இலக்குகள் தொடர்பான விரிவுரைகளை நிகழ்த்தினார். அதன் பின்னர் கல்லூரியின் பிரதான மாணவ தலைவன் நன்றி உரைகளை நிகழ்த்தினார்.

ஆனந்த கல்லூரியின் 1982 ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்க பிரதிநிதிகளினால் இராணுவ தளபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இராணுவ ஆளனி நிர்வாக பணிப்பாளர் மேஜர் ஜெனரல் தேவிந்த பெரேரா, 59 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய, மற்றும் இராணுவ சமிக்ஞை பிரதானி மேஜர் ஜெனரல் என்.எம் ஹெட்டியாரச்சி, கடற்படை மற்றும் விமானப் படையி அதிகாரிகள் உட்பட ஆனந்த கல்லூரியின் பழைய மாணவர்களும் இணைந்திருந்தனர். Asics shoes | adidas poccnr jumper dress pants size