Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th February 2024 20:02:53 Hours

இராணுவ தலைமையகத்திற்கு அருகாமையில் நெல் அறுவடையில் கலந்து கொண்ட இராணுவத் தளபதி

இராணுவத் தளபதியின் எண்ணகரு மற்றும் வழிகாட்டலின் பேரில், ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்திற்கு அருகிலுள்ள 8.5 ஏக்கர் வயல்வெளியில் நெல் அறுவடை இன்று (8) காலை இராணுவ தலைமையகத்தில் பணியாற்றும் படையினரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாக 'ரன் அஸ்வானு நெலீமே மங்கல்ய'.’ நிகழ்வில் கலந்து கொண்டார்.

'ரன் அஸ்வனு நெலீமே மங்கல்ய' அறுவடை ஏற்பாடு சம்பிரதாய மற்றும் சடங்குகளுடன் தொடங்கியது, பல மாதங்களுக்கு முன்பு நெல் விதைகளை விதைத்த வீரர்கள் பிரதம அதிதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் பங்குபற்றலுடன் நெல் அறுவடை ஆரம்பித்தனர்.

8.5 ஏக்கர் நெல் வயல்களில் 1 வது இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடைப் படையணியின் படையினரால் விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பகத்தின் வழிகாட்டுதல்களின்படி இந்த நெற்செய்கை முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடைப் படையணியில் தற்போது நாடளாவிய ரீதியில் 20 பண்ணைகளை பராமரித்து வருகின்றது. மொத்தம் 7500 ஏக்கர் நிலப்பரப்பில் 450 ஏக்கர் நெல் பயிர்ச்செய்கை மற்றும் பல்வேறு விவசாய உற்பத்திகள் மற்றும் கால்நடை வளர்ப்புத் திட்டங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும், அறுவடைகள் இராணுவ வீரர்களுக்கு மலிவு விலையில் விற்கப்படுகின்றன.

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடைப் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கேபீஎஸ்எ பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, நிதி நிர்வாக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடைப் பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் பிஎன். மதநாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ 1 வது இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடைப் படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோர் திட்டத்தின் வெற்றிக்காக தங்கள் முழு ஆதரவையும் வழங்கினர்.

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூஎச்கேஎஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ் மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் அறுவடை விழாவில் கலந்து கொண்டனர்.