Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th September 2022 17:23:03 Hours

இராணுவ தலைமையகத்திற்கு அருகாமையில் ஏற்பாடு செய்யப்பட்ட நெல் அறுவடையில் கலந்து கொண்ட இராணுவத் தளபதி

ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்திற்கு அருகாமையிலுள்ள 12 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நெல் அறுவடை 'ரன் அஸ்வானு நெலீமே மங்கல்ய'அறுவடை காலை(16) இடம்பெற்ற நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இராணுவத் தலைமையகம் பல மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ‘துரு மிதுரு-நவ ரடக்’ எனும் திட்டத்திற்கு அமைய நெற் செய்கையானது இராணுவத்தினால் கைவிடப்பட்ட வயல்களையும் சதுப்பு நிலங்களையும் உழுது ‘மகா’ பருவத்தில் நெற் செய்கைக்கு ஏற்றதாக மாற்றினர்.

'துரு மிதுரு - நவ ரடக்' எனும் திட்டம் 30 டிசம்பர் 2019 அன்று புதிய இராணுவத் தலைமையகத்திற்கு செல்லும் பாதையின் சுமார் 1.7 கி.மீ. இரு பக்கங்களிலும் 170 அரலிய மரக்கன்றுகளை நடும் பணியின் தொடக்கத்துடன், இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி திட்டத்தின் 2 ஆம் கட்டம், கைவிடப்பட்ட சதுப்பு நிலங்களை உழுது இந்த 12 ஏக்கர் நிலப்பரப்பில், நெல் விதைப்பதற்கு ஏற்றதாகக் மாற்றியமைக்கப்பட்டதுடன், மேலும் அதே பாதையில் 140 மீ, கொபோனிலா, கரண்டா போன்ற மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன. கனரக இயந்திரங்களின் உதவியுடன் படையினர்கள் வறண்ட மண்ணை உழுது, மழைநீரை சேகரிக்கும் நீர்த்தேக்கத்தை தோண்டி, நீர்வழிகள் மற்றும் நாற்றுகளுக்கு பாத்திகளை தயார் செய்தனர், அரிய பிஜி 366 சிவப்பு சம்பா விதை நெல் பருவத்திற்கு ஏற்றவாறு விதைக்கப்பட்டது.

இதே திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் போது, நான்கு இடங்களில் சமூகம் சார்ந்த நலத்திட்டமாக பல உடற் பயிற்சி உபகரணங்களை நிறுவுதல், 100 தென்னை கன்றுகள் நடுதல், இராணுவத்தால் தோண்டப்பட்ட நீர்த்தேக்கத்தில் 20,000 விரலி மீன் குஞ்சுகளை விடுவித்தல் மற்றும் நிலப்பரப்பின் முழுப் பகுதியையும் அழகுபடுத்துதல் ஆகியவை முன்னெடுக்கப்பட்டதுடன், பொதுமக்களுக்கு நடைபாதை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.

அன்றைய 'ரன் அஸ்வானு நெலீமே மங்கல்ய' அறுவடை ஏற்பாட்டின் போது பாரம்பரிய சமய மற்றும் சம்பிரதாய சடங்குகளுடன் தொடங்கியது, பல மாதங்களுக்கு முன்பு இராணுவ வீரர்கள் விதைக்கப்பட்ட நெற் பயிர்களை அன்றைய பிரதம அதிதியான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களிடம் அரிவாள்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் அறுவடைக்காக வயல்களில் இறங்கினார்கள்.

மூன்று கட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முழு திட்டமும் போர் கருவிப் பணிப்பாளர் மூலம் நெருக்கமாக ஒழுங்கமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இராணுவத் தலைமையகத்தில் உள்ள நிறைவேற்று பணிப்பாளர் ஆதரவுடன் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடைப் படையணியின் படையினர்களின் தீவிர பங்கேற்புடன் இராணுவத்தின் விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பகம் மற்றும் அதன் கட்டளை அதிகாரிகளால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி இந்நிகழ்வு நடைபெற்றது.

இராணுவத்தின் விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.எஸ்.எம் அபேசேகர ஆரஎஸ்பி யூஎஸ்பி மற்றும் இராணுவத்தின் விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஏ.கே.ராஜபக்ஷ ஆர்எஸ்பி திட்டத்தின் வெற்றிக்குப் பின்னால் தங்கள் முழுப் பங்கையும் வழங்கினார்.

இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் டி.ஜே கொடித்துவக்கு ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பி என்டியூ, பிரதி இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சீ.டி வீரசூரிய ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பி என்டியூ, மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அறுவடை விழாவில் கலந்து கொண்டனர்.